இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
234
தொல்காப்பியம்-நன்னூல்
ரகரத்தை பூர்ந்து நின்ற அகரவுயிரும் கெடுத்து ரகரவொற்றின் மேல் உகர மேற்றிமுடித்தார் நன்னூலார்.
மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும். (தொல்.440)
இதுவும் அது.
(இ-ள்) மூன்று, ஆறு என்பன நெடுமுதல் குறுகி முடிவனவாம்.
இவ்விரண்டெண்களோடு ஏழென்னும் மெய்யீற் றெண்ணுப் பெயரையுஞ் சேர்த்து எண்ணிறையளவும் என்னுஞ் சூத்திரத்து தன். 188) “மூன்றாறேழ் முதல் குறுகும்” என்றார் நன்னூலார்.
மூன்ற னொற்றே பகார மாகும். (தொல்.441)
இதுவும் அது.
(இ-ள்) மூன்றென்னு மெண்ணின்கண் நின்ற னகர வொற்றுப் பகர வொற்றாய்த் திரிந்து முடியும் எறு.
(உ-ம்) மூன்று+பத்து = முப்பஃது எனவரும்.
நான்க னொற்றே றகார மாகும். (தொல்.442)
இதுவும் அது.
(இ-ள்) நான்கு என்னும் எண்ணின்கண் நின்ற னகர வொற்று றகர வொற்றாய்த் திரிந்து முடியும் எறு.
(உ-ம் நான்கு + பத்து = நாற்பஃது எனவரும்.
ஐந்த னொற்றே மகார மாகும். (தொல்.443)
இதுவும் அது. -
ஐந்தென்னு மெண்ணின்கண் நின்ற நகரவொற்று மகர வொற்றாய்த் திரிந்து முடியும் எறு.
(உ-ம் ஐந்து+பத்து = ஐம்பஃது எனவரும்.
ஏழு என்பது குற்றிய லுகரமன்மையின் ஈண்டுக் கூறப்படவில்லை. உருபியலில் காண்க.
எட்ட னொற்றே ணகார மாகும். (தொல்,444)
(இ-ள்) எட்டென்னு மெண்ணின்கண் நின்ற டகர வொற்று ணகர வொற்றாய்த் திரிந்து முடியும் எறு.
(உ-ம்) எட்டுப்பத்து = எண்பஃது எனவரும்.