இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குற்றியலுகரப் புணரியல் 235
எட்ட னுடம்புனல் வாகு மென்ப, (நன்.193)
என்றார் நன்னூலார்.
ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் முந்தை யொற்றே ணகாரம் இரட்டும் பஃதென் கிளவி ஆய்த பகரங்கெட நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி ஒற்றிய தகரம் றகர மாகும். (தொல்.445)
இஃது எய்தாதது எய்துவித்தது.
(இ-ள்) ஒன்பது என்னும் நிலைமொழிமுன் பஃதென்ப தனை வருவித்து முடிக்குங்கால் நிலைமொழியாகிய ஒன்பதென்னுமெண்ணினது ஒகரத்திற்கு முன்னாக ஒரு தகர வொற்றுத் தோன்றி நிற்கும். முன்சொன்ன ஒகரத்தின் முன்னர் நின்ற னகரவொற்று ணகரவொற்றாய் இரட்டித்து நிற்கும். நிலை மொழியில் நின்ற பஃதென்னுஞ் சொல்லும் வருமொழிக்கண் ஆய்தமும் பகர வுயிர்மெய்யுங் கெட்டுப்போக நிலைமொழியில் இரட்டிய ணகரத்தின் பின்னர் ஊகாரமாகிய ஓரெழுத்து வந்து நிற்றல் வேண்டும். வருமொழியிறுதிக் குற்றுகரமேறிய தகர வொற்று றகர வொற்றாய்த் திரிந்து நிற்கும் என்றவாறு.
பஃதென்கிளவியும் ஆய்தமும் பகரமும் கெட என உம்மை தொக்கு நின்றன.
(உ-ம்) ஒன்பது-பத்து = தொண்ணுறு எனவரும்.
இதனை, ஒற்றாய்வந்து நின்ற தகரவொற்றின்மேல் நிலை மொழி ஒகரத்தை ஏற்றித் தொ” என நிறுத்தி ணகரவொற்றி ரட்டி நிலைமொழியில் பஃதென்னுஞ்சொல்லையும் வரு மொழிக் கண் பகரவுயிர்மெய்யையும் ஆய்தத்தையுங் கெடுத்து ஊகாரமேற்றித் தொண்ணு எனவாக்கி வருமொழிக் குற்றுகர மேறி நின்ற தகரவொற்றினை றகரவொற்றாகத் திரித்து முடிக்கத் தொண்ணுாறு என முடிந்து நின்றது.
“பஃதென்கிளவி யாய்த பகரங்கெட” என்பதற்கு நிலை மொழிக்கண் நின்ற பஃதென்னுஞ் சொல்லும் வருமொழியிற் பகரமும் ஆய்தமுங் கெட்டுப்போக எனப்பொருள் கொள்ளாது, வருமொழியாகிய பஃதென்னுஞ் சொல் தன்கண் ஆய்தமும் பகரமுங் கெட்டுப்போக எனப் பொருள்கூறி, நிலைமொழிக்கண் பஃதென்னுஞ் சொற்கெடுதலைப் பகரவாய்தமென்னாத முறையன்றிக் கூற்றினாற்கொள்வர் உரையாசிரியர். ஆசிரியர்