உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

தொல்காப்பியம்-நன்னூல்




   (இ-ள் ஆறென்னு மெண்ணுப்பெயர் அகல், உழக்கு என்பன வரின் முன்னர்க் குறுகி நின்ற முதலெழுத்து நீண்டு முடியும் எறு.
   (உ-ம் ஆறகல், ஆறுழக்கு எனவரும்.
       ஒன்பா னிறுதி உருபுநிலை திரியா 
       தின்பெறல் வேண்டுஞ் சாரியை மொழியே.     (தொல்.459) 
   இது குற்றுகரம் மெய்யொடுங் கெடாது நின்று இன்பெறுக என்றலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது.
   (இ-ள்) ஒன்பது என்னும் எண்ணுப்பெயரிறுதிக் குற்றுகரம் தன்வடிவு நிலை திரியாது நின்று இன்சாரியை பெற்று முடிதல் வேண்டும் எ-று.
   (உ-ம்) ஒன்பது கலம் = ஒன்பதின்கலம், சாடி, துாதை, பானை, நாழி, மண்டை, வட்டி எனவும், கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும்.
   ‘உருபு என்றதனால் ஒன்பதிற்றென இன்சாரியையின் னகரம் றகரமாக இரட்டுதல் கொள்ளப்படும். சாரியை மொழியே யென்றதனான் இன்சாரியையோடு உகரமும் வல்லெழுத்துங் கொடுத்து ஒன்பதிற்றுக்கலம், சாடி என எல்லா வற்றோடும் ஒட்டுக என்பர் நச்சினார்க்கினியர்.
      நூறுமுன் வரினுங் கூறிய இயல்பே.        (தொல்.460)                    

 (இ-ள்) ஒன்று முதல் ஒன்பான்களோடு நூறென்னும் எண்ணுப் பெயர் வந்தாலும் மேற் பத்தென்பதோடு புணரும் வழிக்கூறிய இயல்பெய்தி முடியும் எறு. அவ்வியல்பாவது குற்றுகரம் மெய்யொடுங் கெட்டு மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகி முதலிரெண்ணினொற்று ரகரமாய் உகரம் பெற்று இரண்டென்னும் எண்ணின் இடைநின்ற ரகரம் கெட்டு முடிதலாம்.
   (உ-ம்) ஒருநூறு, இருநூறு, அறுநூறு, எண்ணுாறு எனவரும். 
      
      மூன்ற னொற்றே நகார மாகும்.      (தொல்,461) 

(இ-ள்) மூன்றென்னு மெண்ணின்கணின்ற னகரவொற்று நகர வொற்றாகத் திரிந்து முடியும் எறு.

   (உ-ம்) முந்நூறு எனவரும்.
       நான்கும் ஐந்தும் ஒற்றுமெய் திரியா.       (தொல்,462) 

இதுவுமது.