பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

தொல்காப்பியம்-நன்னூல்



ஒன்பஃதெனப் பஃதென்னும் இறுதியாய்த் திரிந்து நின்றாற் போல, வருமொழியாய எண்பதின்மேற் பத்தை நூறெனவும் எண்ணுாற்றின் மேல் நூற்றை ஆயிரமெனவும் திரித்து நிலைமொழி முதற்கண் ஒகர உயிரோடு தகர மெய்யை அதற்கு ஆதாரமாக நிறுத்தி அந் நிலைமொழியின் இறுதிக்கண் பஃதைக் கெடுத்து அம்மொழி முதற்கு அயல்நின்ற னகரவொற்றை நிரனிறைவகையானே பத்தின் புணர்ச்சிக்கு ளகரவொற்றாயும் பத்தின் திரிபாகிய நூற்றின் புணர்ச்சிக்கு ளகரவொற்றாயும் திரிப்பது முறையாம் என்பது பட,

      ஒன்பானொடு பத்து நூறு மொன்றின் 
      முன்னதி னேனைய முரணி ஒவ்வொடு 
      தகரம் நிறீஇப் பஃதகற்றி னவ்வை 
      நிரலே ணளவாத் திரிப்பது நெறியே.            (நன்.194)

எனச் சூத்திரஞ் செய்தார் பவனந்தி முனிவர்.

       ஆயிரக் கிளவி வரூஉங் காலை 
       முதலீ ரெண்ணின் உகரங் கெடுமே.          (தொல்.464)
   ஒன்று முத லொன்பான்களோடு ஆயிரம் முடியுமாறு கூறுகின்றது.
   (இ-ள்) ஆயிரமென்னுஞ் சொல் ஒன்று முதல் ஒன்பான் களோடு வந்து புணருமாயின் ஒரு இரு என முதல் ஈரெண்ணின் கட் பெற்று நின்ற உகரங் கெட்டு முடியும் எ-று.

(உ-ம்) ஒராயிரம், இராயிரம் எனவரும்.

       முதனிலை நீடினும் மான மில்லை.       (தொல்.465) 

இஃது எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.

   (இ-ள்) அம் முதலிரெண்ணின் ஒகர இகரங்கள் நீண்டு முடியினுங் குற்றமில்லை. எறு.
   (உ-ம்) ஒராயிரம், ஈராயிரம் எனவரும்.
      மூன்ற னெற்றே வகார மாகும்.        (தொல்.466) 

இது மாட்டேற்றோடு ஒவ்வா முடிபு கூறுகின்றது.

   (இ-ள்) மூன்றென்னு மெண்ணின்கண் நின்ற னகா வொற்று வகரவொற்றாய்த் திரிந்து முடியும் எறு.
   (உ-ம்) முல்வாயிரம் எனவரும்.