இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குற்றியலுகரப் புணரியல் 243
முன்னின்ற சூத்திரத்து நிலையென்றதனான் முதனிலை நீண்டு வகரவொற்றுங் கெட்டு மூவாயிரம் எனவும் வருதல் கொள்க.
நான்க னொற்றே லகார மாகும். (தொல்,467)
இதுவுமது.
(இ-ள்) நான்கென்னு மெண்ணின்கணின்ற னகர வொற்று லகரவொற்றாகத் திரிந்து முடியும். எ-று.
(உ-ம் நாலாயிரம் எனவரும்.
நான்கு என்னும் எண்ணின்முன் பத்தும், வகர முதன் மொழியும் ஆயிரமும் வருமொழியாய் வரின் நிலைமொழியீற்றி லுள்ள குற்றியலுகரம் மெய்யொடுங் கெட, னகரம் முறையே றகரமாகவும் லகரமாகவும் திரிந்து முடியுமென்பதனை,
நான்க னொற்றே றகார மாகும். (தொல். 442)
நான்க னொற்றே லகார மாகும். (தொல்.453,467)
என்னும் மூன்று நூற்பாக்களால் தொல்காப்பியனார் விரித்துரைத்தார். நாற்கணமும் வருமொழியாய் வந்து புணர்வுழி, நிலைமொழியாய் நின்ற நான்கு என்னும் எண்ணுப் பெயரில் இறுதியுயிர்மெய்கெட நின்ற னகர வொற்று லகர வொற்றாயும் றகர வொற்றாயும் திரியும் என்பதனை,
நான்கன் மெய்யே லறவா கும்மே. (நன்.191)
என ஒரு சூத்திரத்தாற் குறித்தார் பவணந்திமுனிவர்.
ஐந்த னொற்றே யகார மாகும். (தொல்.488)
இதுவும் அது.
(இ-ள்) ஐந்தென்னும் எண்ணின்கணின்ற நகர வொற்று யகரவொற்றாய்த்திரியும் எறு. - (உ-ம்) ஐயாயிரம் எனவரும்.
ஆறன் மருங்கிற் குற்றிய லுகரம் ஈறுமெய் ஒழியக் கெடுதல் வேண்டும். (தொல்.469)
இதுவுமது.
(இ-ள்) ஆறென்னுமெண்ணின்கணின்ற குற்றியலுகரம் நெடுமுதல் குறுகி அறுவென முற்றுகரமாய் நிற்றலின், தானேறிய மெய்யாகிய றகரவொற்றுக்கெடாது நிற்ப குற்றுகரமாகிய ஈறுகெட்டு முடிதல் வேண்டும் எறு.