உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றியலுகரப் புணரியல் 249

   துறைகெழு மாந்தை, வளங்கெழு திருநகர் எனப்பிற ஈற்றுள்ளும் இச்சாரியை வருதல் மொழியிடைத் தோன்றி என்பதனாற் கொள்ளப்படும். -
   அன்ன மரபின் என்றதனால் சாரியை காரணமாகப் பூக்கெழுரன், வளங்கேழ் திருநகர் என வல்லெழுத்துப் பெறுதலும் நிலைமொழியிறு திரிதலும் சாரியையது. உகரக்கேடும் எகர நீட்சியும் கொள்ளப்பெறும்.
   “சான்றோர் செய்யுட்கட் பிறசாரியை பெற்று விகாரங்கள் எய்தி முடிவனவற்றிற் கெல்லாம் இச்சூத்திரமே விதியாக முடித்துக் கொள்க’ என்பர் நச்சினார்க்கினியர்.
       உயிரும் புள்ளியும் இறுதி யாகிக் 
       குறிப்பினும் பண்பினும் இசையினுந் தோன்றி 
       நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவியும் 
       உயர்திணை அஃறிணை ஆயிரு மருங்கின் 
       ஐம்பா லறியும் பண்புதொகு மொழியுஞ் 
       செய்யுஞ் செய்த என்னுங் கிளவியின் 
       மெய்யொருங் கியலுந் தொழில்தொகு மொழியும் 
       தம்மியல் கிளப்பின் தம்முன் தாம்வரூஉம் 
       எண்ணின் தொகுதி உளப்படப் பிறவும் 
       அன்னவை யெல்லாம் மருவின் பாத்திய 
       புணரியல் நிலையிடை உணரத் தோன்றா.           (தொல்.482)
   மேல் நிலைமொழியும் வருமொழியுமாகச் சொற்களைப் புணர்க்கும் விதி கூறிய ஆசிரியர், இச்சூத்திரத்தால் அங்ஙனம் நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியுமாகப் புணர்க்கப்படாத சொற்கள் இவையென்பதனை எடுத்துரைக்கின்றார்.
   (இ-ள்) உயிரெழுத்தும் புள்ளியெழுத்தும் ஈறாக நிற்பதோர் சொல்லாகிக் குறிப்பின்கண்ணும் இசையின் கண்ணும் பண்பின் கண்ணுந் தோன்றி ஒருவழிப்பட வராத சொற்றன்மை குறைந்த சொற்களாகிய உரிச்சொற்களும், ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று. பல என்னும் ஐந்துபாலையும் அறியவரும் பண்புத்தொகை மொழிகளும், செய்யும், செய்த என்னும் பெயரெச்சச் சொற்களி னுடைய காலங்காட்டும் உம்மும் அகரமும் ஒரு சேர நடக்கும் புடை பெயர்ச்சி தொக்குநிற்குஞ் சொற்களும், தமது தன்மை கூறுமிடத்து நிறுத்தசொல்லும் குறித்து வருகிளவியுமாய் வாராது தம்முன்னர்த் தாமே வந்து நிற்கும் எண்ணுப்பெயரினது தொகுதி யும் உளப்பட அத்தன்மையாகிய பிறவுமெல்லாம் உலகத்து