இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
250
தொல்காப்பியம்-நன்னூல்
மருவி நடந்த வழக்கினது பகுதியைத் தம் இலக்கணமாக வுடையனவாம்; அவை ஒன்றனோடொன்று புணருதல் நடந்த தன்மை இடம் விளங்கத் தோன்றாவென்றவாறு.
உரிச்சொல் குறைச்சொற்கிளவியாதலானும், கருஞ்சான் றான் எனப் பண்புத்தொகையாயவழிக் கரியான் சான்றான் என்பது மரூஉவாய்த் திரிந்து நின்றதாகலானும், கொல்யானை யென வினைத்தொகையாயவழிக் கொன்ற, கொல்கின்ற, கொல்லும் எனக் காலங்காட்டுவன கொல் எனத்திரிந்தனவாக லானும், தம்முன்தாம் வருமெண்ணுப்பெயர்கள் நிறுத்த சொல்லும் குறித்து வருகிளவியும் அன்மையானும் இங்ஙனம் வழக்கிடத்து மரூஉவாய் வந்தன நிறுத்த சொல்லும் குறித்து வருகிளவியுமாகப் புணர்க்கப்படாவென ஆசிரியர் விலக்கினார். (உ-ம்) விண்விணைத்தது, கார்கறுத்தது, ஒல்லொலித்தது எனவும் கரும்பார்ப்பனி எனவும், கொல்யானை எனவும் பப்பத்து எனவும் வரும்.
கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கி னுணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத் தென்மனார் புலவர். (தொல்.483)
இஃது இவ்வதிகாரப் புறனடை கூறுகின்றது.
(இ-ள்) முன்னர் எடுத்தோதாதனவாய்ச் செய்யுளிடத்துத் திரிந்து வருவனவும் வழக்கிடத்தே மரூஉவாய்த் திரிந்து வருவன வும், முற்கூறப்பட்ட இலக்கண முடியின் வேறுபடத் தோன்றின் நல்லறிவினது ஆராய்ச்சியான் வழக்கியற்கண் அவற்றின் வேறுபாட்டை அறிந்து நடத்துகவெனக் கூறுவர் புலவர்.
(உ-ம்) தட என்னும் அகர வீற்றுரிச்சொல் தடவுத்திரை’ என உகரமும் வல்லெழுத்தும் பெற்றும் தடவுநிலை என உகரம் பெற்றும் வந்தது. அத என்னும் அகரவீறு அதவத்துக்கனி’ என வேற்றுமைக்கண் அத்துப்பெற்றது. கசதப-தோன்றின் என்பது ‘கசதபத்தோன்றின் என வல்லெழுத்துப் பெற்றது.
நறா, குரா எனவரும் ஆகாரவீற்றுச் சொற்கள் நறவங் கண்ணி குரவlடிய எனக் குறியதனிறுதிச் சினைகெட்டு, இரு வழியும் அம்முப் பெற்றன. ஆகார வீறு பிணா+நாய் = பிணவு நாய் என அல்வழிக்கண் அம்முப் பெறாதும், இரா+வழங்கு =