உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றியலுகரப் புணரியல் 251

இரவழங்கு என உகரம் பெறாதும் வந்தன. கள்ளி+காடு = கள்ளி யங்காடு என இகரவீறு வேற்றுமைக்கண் அம்சாரியை பெற்றது. தீ+அன்ன = தீயினன்ன (மலைபடு-145) என ஈகாரவிறு வேற்றுமைக்கண் இன்சாரியை பெற்றது. திரு+அவர் = திருவத்தவர் (நாலடி-57) என உகரவீறு வேற்றுமைக்கண் அத்துச் சாரியை பெற்றது. ஏ+பெற்ற = ஏப்பெற்ற (சீவக-2955) என ஏகார வீறு வேற்றுமைக்கண் எகரம்பெறாது வந்தது. கை+உண்டாம் போழ்தே = கைத்துண்டாம் போழ்தே (நாலடி-19 எனவும், கை+இல்லர் = கைத்தில்லர் (நான்மணி-69) எனவும், புன்னை+ கானல் = புன்னையங்கானல் எனவும், முல்லை+தொடையல் =

முல்லையந்தொடையல் எனவும் ஐகாரவீறு வேற்றுமைக்கண் அத்தும் அம்மும் பெற்றன. கோ+இல் = கோயில் என ஒகாரவீறு யகரவுடம்படுமெய் பெற்றது. காரெதிர் கானம் பாடினேமாக’ (புறம்-144) பொன்னந்திகிரி என்புழிக் கான், பொன் என்னும் னகரவீறுகள் இருவழியும் அம்முப் பெற்றன. வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரலிசை (நற்றினை-62) என்புழி வெதிர் என்னும் ரகரவீறு வேற்றுமைக்கண் அத்துப் பெற்றது. ‘நாவலந் தண்பொழில் (பெரும்பாண்-465) என லகரவீறு வேற்றுமைக்கண் அம்முப் பெற்றது. நெய்தல்+சிறுபறை = நெய்தலஞ் சிறுபறை என லகரவீறு அல்வழிக்கண் அம்முப் பெற்றது. ‘ஆயிடை யிரு.பேராண்மை செய்தபூசல்” (குறுந்தொகை-43 என்புழி அவ்’ என்னும் வகரவீறு இடை’ என்னும் உருபொடு புணர்ந்து ‘ஆயிடை என நீண்டு வேறுபட முடிந்தது. தெவ்+முனை = தெம்முனை என்புழி வகரங்கெட்டு மகர வொற்றுப்பெற்று முடிந்தது. அ+அனைத்தும் = அன்றி யனைத்தும் என அகரச் சுட்டு அன்றி எனத் திரிந்தது. கோங்கின் முகை, தெங்கின் பழம் எனக் குற்றுகரவீறு இன் பெற்றன. இவ்வாறே செய்யுளில் திரிந்து வருவனவுளவேல் அவற்றையெல் லாம் இவ்வதிகாரப் புறனடையால் முடித்துக் கொள்ளுதல் வேண்டும் என்பர் நச்சினார்க்கினியர்.

   ‘அருமருந்தன்னான் எனற்பாலது அருமருந்தான் என மரூஉ வாய் முடிந்தது என இளம்பூரணரும், அருமருந்தான் என்பது ரகர வுகரங்கெட்டு அருமந்தான் என முடிந்தது என நச்சினார்க்கினியரும் கூறுவர். சோழன்+நாடு = சோணாடு எனவும் பாண்டியன்+நாடு = பாண்டியநாடு எனவும் அன்கெட்டு முடிந்தன. தொண்டைமான்+நாடு = தொண்டைநாடு என ஈற்றெழுத்துச் சில கெட்டும், மலையமான்+நாடு = மலாடு என