பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

தொல்காப்பியம்-நன்னூல்



முதலெழுத் தொழிந்தன பலவுங்கெட்டும் முடிந்தன என்வும், பொது+இல் = பொதியில் என உகரந் திரிந்து இகரமாய் யகர வுடம்படுமெய் பெற்று முடிந்தது எனவும், பிறவும் இவ்வாறே திரிந்து மருவி வழங்குவன வெல்லாம் இப்புறனடையான் அமைத்துக்கொள்க எனவும் விதி கூறுவர் நச்சினார்க்கினியர்.

   நன்னூலாசிரியராகிய பவணந்தி முனிவர் தாம் வகுத்துக் கொண்ட விகுதிப் புணர்ச்சி, பதப் புணர்ச்சி, சாரியைப் புணர்ச்சி, உருபு புணர்ச்சி ஆகிய நான்கின், புணர்ச்சிக் கண்ணும் வேறுபட வந்தவற்றை யெல்லாம் உணர்ந்து ஒப்பு நோக்கி அமைந்துக் கொள்ளும் முறையில் புறனடைச் சூத்திரங் களாகச் சில நூற்பாக்களை எழுத்ததிகாரத்தின் இறுதியில் அமைத்துள்ளார்.
       இதற்கிது சாரியை யெனின்அள வின்மையின் 
       விகுதியும் பதமும் உருபும் பகுத்து,இடை 
       நின்ற எழுத்தும் பதமும் இயற்கையும் 
       ஒன்ற உணர்த்தல் உரவோர் நெறியே.         (நன்.253)

என்பது சாரியை பற்றிய புறனடையாகும்.

   விகுதி முதலிய புணர்ச்சிக்கண் இன்னதற்கு இன்ன சாரியை என்று வரையறுத்து விதித்தன வற்றுள்ளும் ஒழிந்தன வற்றுள்ளும் தனித்தனி யெடுத்துக் கூறத் தொடங்கின் அவை அளவின்றி விரியுமாகலின் விகுதிப் புணர்ச்சியினையும் பதப் புணர்ச்சியினையும் உருபு புணர்ச்சியினையும் கண்டவிடத்து அவற்றைப் பகுத்து அவற்றினிடையே நின்ற ஏகாரம் அகரம் முதலிய எழுத்துச் சாரியையினையும் அன் ஆன் முதலிய பதச் சாரியையினையும் இவ்விருசாரியையும் பெறாது இயல்பாய் நின்ற தன்மையினையும் தெளிய அறிவித்தல் அறிஞரது நெறிமுறையாகும் என்பது இந்நூற்பாவின் பொருளாகும்.
   உருபு புணர்ச்சிக்கண் விதித்த சாரியை முதலிய முடிபுகள் அவ் வுருபுதொக்க பொருட்புணர்ச்சிக்கண்ணும் உரியவை புரியன என்பது,
       உருபின் முடிபவை ஒக்குமப் பொருளினும்.     (நன்.238) 

என்பதனால் உணர்த்தப்பட்டது.

   வேற்றுமையுருபுகள் நின்று நிலைமொழி வருமொழிகளுடன் புணருமிடத்துப் பொருட்புணர்ச்சிக்குக் கூறிய விதிகளைப் பெரும்பாலும் பெறுதலை,