பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

267

    1939ஆம் ஆண்டு வெள்ளைவாரணனாரின் திருமணம்; செங் கல் பட்டு மாவட்டம் மானாம்ப தி என்ற ஊரை ச் சேர்ந்த ம. அ. கனகசபை முதலியாரின் இரண்டாம் மகள் பொற்றடங்கண்ணியை, சனவரித் திங்களில் திருமணம் செய்து கொண்டார்.
     இந்தி எதிர்ப்பு நூல் இயற்றுதல்; அப்போதைய தமிழக முதல்வராக இருந்தவர் இராசகோபாலாச்சாரியார், அரசுப் பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாய பாடமாக்கினார். அதனை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் வெள்ளை வாரணனார் கலந்து கொண்டார். தம் எதிர்ப்பினை, “காக்கை விடு தூது’ என்னும் பெயரில் நூல் இயற்றி அரசுக்கு அனுப்பி வைத்தார். அந்நூலைப் பாந்தளுர் வெண்கோழியார் என்ற புனைப் பெயரில் விடுத்துப் பெரும் பரபரப்பை உண்டு பண்ணினார். அந்நூலைத் தமிழ்ப் பொழில், விடுதலை, திராவிடநாடு ஆகிய இதழ்கள் வெளியிட்டுச் சிறப்பித்தன.
     1943ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணிக்கு அமர்த்தப்படுதல்.
    1944ஆம் ஆண்டு துரத்துக்குடி சைவ சித்தாந்த சபை, வெள்ளைவாரணனாருக்கு சித்தாந்தச் செம்மல் பட்டம் வழங்கி மகிழ்தல்.
    1947ஆம் ஆண்டு விபுலாநந்த சுவாமிகள் இயற்றிய யாழ் நூலுக்கு, வெள்ளைவாரணனார் சிறப்புப்பாயிரம் இயற்றி அளித்தது.
    1948ஆம் ஆண்டு வெள்ளைவாரணனார் எழுதிய ‘சங்க காலத் தமிழ் மக்கள்’ என்னும் நூலை, சென்னை ‘நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி’ என்ற தனியார் நிறுவனம் வெளியிட்டது.
    1952ஆம் ஆண்டு பொற்றடங்கண்ணிக்குப் பெண்குழந்தை பிறப்பு. வெள்ளைவாரணனார் மங்கையர்க்கரசி எனப்பெயர் சூட்டி மகிழ்தல்.
     இவர் எழுதிய குறிஞ்சிப் பாட்டாராய்ச்சி’ என்னும் நூல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டது. இந்நூல் சொற்பொழிவு நூல். -
    1954ஆம் ஆண்டு அரபத்த நாவலர் இயற்றிய பரதசங்கிரகம் என்ற நாட்டிய நூலை வெள்ளைவாரணனார் பதிப்பாசிரியராக