உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270


  1983ஆம் ஆண்டு தமிழக ஒதுவார் சங்கம் ‘சங்கநூல் பெரும் புலமைச் சான்றோர்’ என்ற பட்டம் அளித்துள்ளது. (30.1.83).
  தொல்காப்பியம் - பொருளதிகாரம் - புறத்திணையியல் உரைவளம்; நூல் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
   தொல், பொருள். களவியல், தொல். பொருள். கற்பியல், தொல், பொருள். பொருளியல் உரைவ ள நூல்கள் வெளியிடப்பட்டன.
   1984ஆம் ஆண்டு காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடம் ‘திருமறை உரைமணி’ என்ற பட்டத்தை அளித்தது.
   கரந்தைத் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்ச் சான்றோர்’ பட்டத்தை அளித்துள்ளது.
  1985ஆம் ஆண்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ‘கலைமாமணி” விருது வழங்கியது. (26.1.85).
  
  தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உவமையியல் உரை வளம் வெளியிடப்பட்டது. (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்).
  சு. சாமி ஐயா உரை எழுதிப் பதிப்பித்த நூல் மங்கையர்க்கரசி வெண்பா. இந்நூலுக்கு அணிந்துரை அளித்தது. (நவம்பர் திங்கள்).
  1987ஆம் ஆண்டு காக்கை விடு தூது தனி நூலாக, சொந்த வெளியீடாக வெளியிட்டது.
  தில்லைக்கோயிலில் திருமுறை ஒதவேண்டும் என்று முழக்கமிட்ட வ.சுப. மாணிக்கத்துடன் தோளோடு தோள் நின்று போராடினார்.
  ‘தில்லைப் பெருங்கோயில் வரலாறு’ என்னும் நூல் தில்லைத் தமிழ் மன்றம் வெளியிட்டது.
  நாவலர் சோமசுந்தர பாரதியார் நினைவுச் சொற்பொழிவினை நிகழ்த்துதல், இடம்: தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம், பொருள் தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு (67.87).