பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தொல்காப்பியம்-நன்னூல்


இகரம் உகரம் என்றொழியாது குற்றியலிகரம் குற்றியலுகரம் எனறாா்.

 புணர்ச்சி வேறுபடுதலின் இகர உகரங் குறுகி நினறன வென்றும், சந்தனக்கொல் குறுகினால் பிரப்பங்கோல் ஆகாதவாறு போல் உயிரது குறுக்கமும் உயிரேயாம் என்றும் இவற்றைப் புணர்ச்சி வேற்றுமையும் பொருள் வேற்றுமையும் பற்றி வேறொரெழுத்தாக ஆசிரியர் வேண்டினாரென்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.
 ஒரு மாத்திரையாய் நின்ற குற்றெழுத்துக்களே, ஈரொற்றுடன் நின்று கால்மாத்திரை பெற்ற மகரக் குறுக்கம்போல, செயற்கையான் அரைமாத்திரை பெற்றுக் குறுகி நின்றன என உலகம் மலையாமைப் பொருட்டு இவை இங்ஙனம் ஆதல் இயல்பென்பார் குற்றிகரம் குற்றுகரம் என்றொழியாது குற்றியலிகரம் குற்றியலுகரமென ஆசிரியர் குறிப்பிட்டாரெனவும், ருற்றியலிகரம் நிற்றல்வேண்டும், ‘குற்றியலுகரம் வல்லாறுார்ந்தே நிற்றல் வேண்டும்' எனவுங்கூறி, இவைபற்றி மாத்திரை குறுகுமெனக் கூறிற்றிலரெனவும், ‘ஆயிரு மூன்றே யுகரம் குறுகிடன் யகரம் வரும் வழி யிகரம் குறுகும் என்புழி வரும் குறுகுமென்னுஞ் சொல் “கோயின் மன்னனைக் குறுகினள் சென்றுழி”, “நீக்கிற்றெறு உங் குறுகுங்காற் றண்ணென் னும்” என்புழிப்போல அணுகுதற் பொருண்மைத்தெனவும் கூறிக், குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தம் போல வேறெழுத்தேயாவனவன்றி ஒரு மாத்திரையாய் நின்ற இகர உகரங்களே மகரக்குறுக்கம் முதலியனபோல ஒரு காரணம்பற்றி அரை மாத்திரையாய் நின்றவனல்ல எனச் சிவஞான முனிவர் சூத்திர விருத்தியில் விளங்க உரைத்தார்.
 ஆயினும் ‘ஆயிரு மூன்றே யுகரங் குறுகிடன்' என்புழியும் “யகரம் வரும் வழி யிரகங் குறுகும் என்புழியும் வந்த குறுகும் என்ற சொல்லிற்கு, அவர் கூறியவாறு அணுகுமெனப் பொருள் கூறின், முறையே அவ்விரு தொடரும், அவ்வறுவகைச்சொல்லும் உகரம் வருமிடம் எனவும், யகரமுதன்மொழி வருமொழியாய் வருமிடத்து ஆண்டு இகரம் வரும் எனவும் பொருள்பட்டு, அவ்வாறு வருவன முற்றிகர முற்றுகரமே எனத் திரிபுணரச்சி தோன்றிக் குற்றியலுகரம் கொள்ளப்படாவாம் ஆகலின், அவ் இகர உகரங்கள் தன் மாத்திரையிற் குறுகி அரைமாத்திரை பெறும் என்பதே பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது. குற்றிய-