பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூன்மரபு

23


லிகரம் குற்றியலுகரம் என்பன, குறுகுதலை யியல்பாகவுடைய இகர உகரம் என்றே பொருள்படுமாகலின், அவை அவ் ஒலி வேற்றுமை காரணமாக வேறெழுத்தெனக் கொள்ளப்படுதலும், இகரவுகரங்களின் தொடர்புடைமை காரணமாக உயிரன் றெனத் தள்ளப்படாமையும் நன்கு விளங்கும்.

 ஆய்தம் என்பதைப்பற்றி நச்சினார்க்கினியர் பின் வருமாறு கூறுவர் ஆய்தமென்ற ஓசைதான் அடுப்புக் கூட்டுப்போல மூன்று புள்ளி வடிவிற்றென்பதுணர்த்தற்கு “ஆய்தமென்ற முப்பாற்புள்ளியும்” என்றார். அதனை இக்காலத்தார் நடுவுவாங்கியிட்டெழுதுப. இதற்கு வரிவடிவு கூறினார்; ஏனைய ஒற்றுக்கள்போல உயிரேறாது ஒசை விகாரமாய் நிற்பதொன்றாக லின் எழுத்தியல் தழா ஓசைகள்போலக் கொள்ளினும் கொள்ளற்க என்றற்கு எழுத்தேயாமென்றார். இதனைப் புள்ளிவடிவிற்றெனவே ஏனையெழுத்துக்களெல்லாம் வரிவடி வினவாதல் பெற்றாம் என்பதாம். இதன்கண் ஆய்தம் மூன்று புள்ளி வடிவிற்றென்பதும், நச்சினார்க்கினியர் காலத்திலுள்ளார். சிலர் அதனை நடுவே வளைந்த கோடிட்டு வழங்கினார்கள் என்பதும், ஆய்தம் ஏனை ஒற்றுக்கள்போல உயிரேறாது நிற்பதொன்றென்பதும் புலப்படுதல் காணலாம்.
 
 நடுவு வாங்கியிட்டெழுதுப என்பதற்கேற்ப 8-ஆம் நூற்றாண்டில் பல்லவ மல்லன் காலத்ததாக அமைந்த காசாக் குடிப்பட்டயத்துள் வெஃகா என்றசொல்லின் ஆய்தம் வெ..கா என்று மேலும் கீழும் புள்ளியும் இடையில் வளைந்த கோடும் உடையதாக வரையப்பட்டிருப்பது ஆராயத்தக்கது.
 வேதத்திலே ஜிஹ்வா மூலியத்தொனி பெறுவதோரெழுத்துக்கு ஆஸ்ரதம் என்ற பெயரை வேத இலக்கணம் இட்டு வழங்குவதென்றும், அத்தகைய உச்சரிப்புடன் அஃகம் முதலியனவாகத் தமிழில் வழங்கும் எழுத்துக்கும் தமிழிலக்கணம் வகுத்த ஆதியிருடிகள் அவ்வடசொல்லை ஆய்தமெனத் திரிய வழங்கினராதல் வேண்டுமென்றும் பின்வருமாறு கூறுவர்:"ஆய்தம் முப்புள்ளி யென்பதற்கு ஆதரவில்லை. ஆயதம் என்ற வடசொற்கு நீண்டது என்பது பொருள் என்பவாகலின் ஈண்டு நீண்ட கோடுளதெனல் பொருந்தும். (பலவகை வடிவுகளைக் கூறுமிடத்து நன்னூற் பழைய உரைகாரர் மயிலைநாதர்:- சதுரம் ஆயதம் வட்டம், முக்கோணம் சிலை என்றிவற்றைக் குறிப்பிட்டுள்ளார்) இவற்றுள் இவ்வாயதமும் ஒன்றாய் நீண்டவடிவினைக்