25
அவர் தமக்கு ஆய்தம் முப்புள்ளி வடிவிற்றன்றெனல் கருத்தென்பது பொருந்தாது. அன்றியும் அவர் கூறியபடி மூன்றும் புள்ளி பெறுதல் காரணமாக முப்பாற் புள்ளியெனப் பட்டன எனின் எகரவொகரம் புள்ளிபெறுதல் காரணமாகப் புள்ளியென வழங்கப் படாமையாலும், குற்றியலுகரம் மொழியீற்றின்கணல்லது புள்ளி பெறாமையானும், அறிகுறியாக வரும் புள்ளியையுடைய ஈற்றுக் குற்றியலுகரத்தின் பிற வடிவுகளிருக்கு மொழிமுதற் குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆகிய இவற்றிற்குப் புள்ளியெனப் பொதுப் பெயரிடுதல் சாலாதாகலா னும், ஆய்தத்திற்கு முப்பாற் புள்ளி யல்லது வேறு வடிவின்மை யானும், குற்றியலிகர உகரங்களை யாண்டும் புள்ளி என்ற பெயரால் எடுத்தாளாமல் மெய்யோடியைதல் முதலாக உயிரியல்பின் வைத்துணர்த்தலானும் அக்கூற்றப் பொருந்தாது என்பது. எனவே ஆய்தம் மூன்று புள்ளி வடிவிற்றென்பது உரையாசிரியர் நச்சினார்க்கினியர் உரைகளான் ஆசிரியர் தொல்காப்பியனார்க்குடன் பாடென்பது பெறப்பட்டது. பின்னரும் ஆசிரியர் ஆய்தப்புள்ளியென இதன் பெயருரைத்த லும் ஆய்தம் புள்ளி வடிவிற்றென்பதை வலியுறுத்தும். மூன்று புள்ளி வடிவிற்றாய் எழுதப்பட்டு வந்த ஆய்தம் -ே என இடைக் காலத்தாரால் இடையே வளைத்தெழுதப் பட்டதென்பது. 8-ம் நூற்றாண்டிற் பல்லவ மன்னன் சாசனமாகிய காசாக்குடிப் பட்டயத்துள் வெஃகா என்ற சொல் வெ.-ே.கா என எழுதப் பட்டிருத்தலானும், நச்சினார்க்கினிய ருரையானும் நன்கு விளங்கும். ஒரு சிலரால் இங்ஙனம் ஆய்தம் இடையே வளைத்தெழுதப் பட்டாலும் பெரும்பாலார் மூன்று புள்ளி வடிவினதாகவே அதனை எழுதி வருகின்றமை எல்லார்க்கும் உடன்பாடாகும்.
வடமொழியில் ஜிஹ்வாமூலியத்தொனி பெறுவதோ ரெழுத்து ஆஸ்ரதம் என வழங்கப்படுதல் கொண்டு தமிழ்ச்சார் பெழுத்தாகி ஒரொலியின் பெயராகிய ஆய்தம் அதன் திரி பென்று கோடற்கு யாதோரியையும் இல்லை. வட மொழியில் ஆஸ்ரதம் என்பதன் உருவமும், அச்சொற் பொருளும், அப்பெயருடைய எழுத்தியல்பும் வேறு. தமிழில் ஆய்தமென்ற சொல்லுருவும் அதன் பொருளும் அப்பெயருடைய எழுத்தி னொலியும் வேறு. இவ்வாறு இவ்விரண்டின் உருவம், பொருள் இயல்பு என்பன வேறுபட்டவனாக எவ்வித இயைபுமில்லாமல் வட சொல்லாகிய ஆஸ்ரதம் என்பது தமிழில் ஆய்தமாய்த் தொ.3.