பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தொல்காப்பியம்-நன்னூல்



திரிந்ததென்றல் எவ்வாற்றானும் பொருந்தாத தாகும். பலவகை வடிவுகளைக் கூறப்போந்த மயிலைநாதர் நீண்ட வடிவென்பதனை ஆய்தம் என வடசொல்லாற் கூறியது கொண்டு, நீண்ட வடிவும் ஒசையுமின்றிப் புள்ளி வடிவிற்றாகிய ஆய்தம் அவ்வாயதமென்ற வடசொல்லின் திரிபாகுமென்றல் பொருந்தாது. நச்சினார்க்கினியர் தம் காலத்தார் இடையே வளைத்தெழுது வார் என்றபடியே வெடிகா” எனப்பிறை வடிவமாக எழுதப் பட்டதனை நீண்ட கோடுள்ளதாய்ப் புள்ளி பெற்றதெனத் திரித்துக் கொண்டு, பாண்டிய சாசனமொன்றில் கே.என மேலுங் கீழும் புள்ளியையுடைய இரு புள்ளி வடிவாகிய வடமொழி விசர்க்க எழுத்தானது எழுதுவோர் பிழையால் இடையே .ே என்றபடி வெட்டுக்கோடு விழுந்ததனை இயற்கை யெழுத்தாக வைத்து அதனையிடையே பிறைவடிவாக வளைத்தெழுதிய கோடுள்ள ஆய்தத்தோடு ஒப்புமை காட்டி ஆயதம் என்ற வட சொல்லே ஆய்தமாகத் திரிந்ததெனவும் அவ்விசர்க்க ஒலியே ஆய்தவெழுத்தெனவும் கூறுவது எவ்வித இயைபுமின்றி முரணாதலுங் காண்க.

 (1) நீண்ட வடிவத்தைக் குறிக்கும் ஆய்தமென்ற பெயர் வடமொழி விசர்க்கத்துக்கு வழங்குதலும் அவ் விசர்க்கத் திடையே நீண்ட கோடிட்டு எழுதுதலும் வடமொழி யாளரிடையே வழங்கப்படவில்லை. அதனால் என விசர்க்கம் இடையே கோடு பெற்றுக் காணப்படுதல் வடமொழி வழக்கத்தோடு பொருந்தாத பிழைவடிவாதல் உண்மை.
 (2) இடைக்காலத்துச் சாசனமொன்றில் ஆய்தம்-கீ என வரையப்பட்டிருத்தலை நீண்ட வடிவு என்ற பொருள் புலப்படும்படி ஆயுதமென்ற பெயராற் குறிப்பிடுதல் சாலாது. எனவே ஃ என எழுதப்பட்டு வரும் வடிவும் இடைக்காலத்தில் % என நடுவு வாங்கியிட் டெழுதிய வடிவும் ஆய்தம் மூன்று புள்ளியாகவேனும் இடையில் வளைந்த கோடிட்டேனும் எழுதப்பட்டதென்பதனை விளக்குமன்றி அங்ஙனம் எழுதப் படாத இரு புள்ளியாகிய விசர்க்கமும் முப்புள்ளியாகிய ஆய்தமும் ஒன்றே என்பதனை உணர்த்தாது.
 (3) தமிழ்ச் சார்பெழுத்தினுள் ஒன்றாகிய ஆய்தம் உயிரேறாது ஒசை விகாரமாய்க் குற்றெழுத்தின் முன்னதாய் உயிரோடு கூடிய வல்லெழுத்து ஆறன் மேலதாய் அவற்றிடையே வரும் இயல்பிற்றென்பது,