பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூன்மரபு

29



சார்பெழுத்தாயின வெனக்கொள்க’ எனச் சங்கர நமச்சிவாயப் புலவரும் காரணங்கறிச் சென்றனர்.

 ஆசிரியர் தொல்காப்பினார், குற்றியலிகரம் குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்றையும் சார்பெழுத்தினுள் அடக்கியது, இவை யாதானும் ஒருசொல்லைச் சார்ந்து வரினல்லது தனியே ஒலித்து நிற்கும் இயல்பின்றி முதலெழுத்துக்களைச் சார்ந்து வரும் இயல்புபற்றியேயாம். ஆசிரியர் “சார்ந்து வரினல்லது தமக்கியல்பிலவெனத் தேர்ந்து வெளிப்படுத்த ஏனைமூன்றும்” என (பிறப்- 19-ல் விளக்கிப் போதலானும் இவற்றியல்பு தனியே வரவியலாது ஒன்றனைச் சார்ந்து வருதலே யென்பது புலனாம். எனவே தன்னியல்பின் நிற்றலாற்றாதனவாய் மொழியைச் சார்ந்துவரும் இயல்புடைய எழுத்துக்களே சார்பெழுத்தாதல் தொல்லாசிரியர் துணிபென்பது தேற்றம்.
 ஈண்டு நன்னூலாராற் சார்பில் சேர்க்கப்படும் உயிர் மெய்யெழுத்துக்கள், உயிரும் மெய்யுமென வேறு நின்றவிடத்தும் தனியே நிற்றற்குரிய முதலெழுத்தாய் நிற்றலானும், உயிருமெய்யுங்கூடி நிற்றல் பொருளுணர்த்தும் பொருட்டன்றித் தனியே நிற்றலாற்றாத் தன்மை பற்றி யன்றாகலானும், உயிரு மெய்யுமாகிய முதலெழுத்துக்களிரண்டும் ஒன்றுபட்ட நிலையில் அக்கூட்டத்தினை புணர்த்திய பெயரே உயிர்மெய் என்பதன்றி, முப்ப தெழுத்தினும் வேறுபட்ட எழுத்தொலிகளை அப்பெயர் குறித்ததென்றல் வழக்கன்மையானும், மெய்யும் உயிருங் கூடுதலாகிய கூட்டம்பற்றி வேறுபட்டதெனின் மெய்யோடியை யினும் உயிரியல் திரியா என்றற்றொடக்கத்து விதிகள் வேண்டப் படாமையானும் முதலெழுத்துக்களின் வேறாகவைத்து உயிர் மெய்யை (உயிரேறிய மெய்யை)ச் சார்பெழுத்தென்றல் பொருந்தாதென்க. இனி உயிரளபெடையினை மூவளபிசைக் கும் வேறெழுத்தாகக்கொண்டு சார்பெழுத்துள் அடக்குதலும் பொருத்தமற்றதாம். என்னை? ஆசிரியர் தொல்காப்பியனார் அளபெடையினைத் தனியே ஒரெழுத்தெனக் கொண்டில ரென்பது,

“மூவளபிசைத்த லோரெழுத்தின்றே:

“நீட்டம் வேண்டி னவ்வள புடைய

கூட்டியெழுஉத லென்மனார் புலவர்: நூன்மரபு 5, 6)

என வரும் சூத்திரங்களான் நன்கு புலப்படும். ஒரெழுத்து மூன்று மாத்திரையாக இசைத்தலின்று. ஒலி நீட்சி வேண்டுவோர்