இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
30
தொல்காப்பியம்-நன்னூல்
அதற்கேற்ற இயல்புடைய எழுத்துக்கூட்டி இசையினை எழுப்பிக் கொள்க என்பதே மேற்காட்டிய சூத்திரங்களின் பொருள். இதனால் ஒரெழுத்தின் ஒலி நீட்சியை வேண்டுவோர் அவ்வொலியைத் தருதற்குரிய ஒற்றுமையுடைய எழுத் தொலிகளைக் கூட்டிக் கோடலே அளபெடையாமெனப் பெறப்படுதலின், அளபெடை இரண்டு முதலிய எழுத்துக்களின் கூட்டொலியேயன்றித் தனியே ஒரெழுத்தன்றென்பது ஆசிரியர் கருத்தாதலுணர்க. ஒற்றளபெடைக்கும் இஃதொக்கும்.
எனவே முதலெழுத்துக்களில் இனமுடைய எழுத்துக் களின் வேறாகாத அளபெடைகளைச் சார்பெழுத்தினுளடக்கு வது இயைபுடைத்தன்று. ஆகவே உயிரளபெடை ஒற்றளபெடை பாம் இவற்றையும், எழுத்தெனப்படும் முதலெழுத்துக்கள் புணர்ச்சியிற் பட்டவிடத்து உண்டாம் விகாரங்களாகிய ஐகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம் முதலியவற்றையும் பலணந்தியார் சார்பெழுத்தெனச் சார்த்தியுரைத்தல் சார்பெழுத்தின் இலக்கணத்திற்கு முற்றும் மாறாதல் ஒருதலை.
“இனி இம் மூன்றுமேயன்றி உயிர்மெய் முதலியவற்றையுஞ் சார்பெழுத்தென்பாரும் உளராலோவெனின்” என வினா வெழுப்பிக்கொண்டு, “ஆல் என்புழி உயிர் முன்னும் மெய் பின்னும் நின்று மயங்கினாற்போல, லா என்புழி மெய் முன்னும் உயிர்பின்னும் நின்று மயங்கினவேயல்லாது, உயிரும் மெய்யு மாகிய தந்தன்மை திரிந்து வேறாகாமைக்கு “மெய்யோடியையினும் உயிரியல்திரியா” என்றற்றொடக்கத்துச் சூத்திரங்களே சான்றாகலான், உயிர்மெய்யாகிய காலத்தும், குறின்மை, நெடின்மை என்னும் உயிர்த் தன்மையும், வன்மை, மென்மை, இடைமை என்னும் மெய்த்தன்மையும் தன்னியல்பிற்றிரிபு படாமையானும், உடல்மேல் உயிர் வந்தொன்றுதல் பொன்மணி போல இயல்பு புணர்ச்சி யென்பவாகலானும், ... துணங்கை யென்பது மெய்முதல் உயிரீறு மெய்ம்மயக்கமெனவும், வரகு என்பது உயிர்த்தொடர் மொழிக் குற்றியலுகரமெனவும் கொள்வதன்றி, உயிர்மெய்முதல் உயிர்மெய்யீறு, உயிர்மெய் மயக்கம், உயிர்மெய்த் தொடர்மொழிக் குற்றியலுகரம் எனக் கொள்ளாமையின் ஒற்றுமை நயம்பற்றி ஒன்றென்பதனால் ஒரு பயனின்மையானும் . உயிரோடு கூடியவிடத்து வரிவடிவு வேறு படுதலின் அதுபற்றி “புள்ளியில்லா எல்லா மெய்யும்” என மெய்ம்மேல் வைத்துச் சூத்திரஞ்செய்து வடிவெழுத்திலக்கணங்