இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
32
தொல்காப்பியம்-நன்னூல்
ஐகார ஒளகாரங்கள் குறிய எழுத்தின் நெடியவாதற்குக் குற்றெழுத்தாகிய இனந் தமக்கில்லையெனினும் மாத்திரை யொப்புமையான் அவை நெட்டெழுத்தெனப் பட்டன என்பர் உரைகாரர்.
இவ்விரு சூத்திரங்களிலும் ஆசிரியர் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் குற்றெழுத்தெனப் பெயர் பெறுமென்றும், ஆ. ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழும் நெட்டெழுத்தெனப் பெயர் பெறுமென்றும் கூறினார். இவற்றைப் பின்வருஞ் சூத்திரங்களில் எடுத்தாளுதற் பொருட்டு, குற்றெழுத்து, நெட்டெழுத்து என்ற இவற்றை இப்பெயர்களாற் கூறுதலேயன்றிக் குற்றெழுத்தைக் ‘குறியது (தொல் 38, 226, 234) என்றும், நெட்டெழுத்தை நெடியது (தொல், 160, 40) என்றும் சில இடங்களில் வழங்கி புள்ளார்.
இனி நன்னூலார்,
அவற்றுள், அ, இ, உ, எ, ஒ க்குறிலைந்தே. (நன். 64)
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள நெடில். (நன். 65)
என்ற சூத்திரங்களால் குற்றெழுத்து, நெட்டெழுத்து என்றவற்றை முறையே குறில், நெடில், எனத்திரித்து வழங்கியுள்ளார்.
இவர் குறில் நெடில் ஆகிய பெயர்களை உயிரெழுத்திற்கும், உயிர்மெய் யெழுத்திற்கும், உரியனவாகக் கொண்டு, உயிர்க்குறிதல், உயிர்நெடில் ஆகிய இரண்டனையும் குற்றுயிர், நெட்டெழுயித்து எனச் சிறப்புப்பெயரிட்டு வழங்குவர் நன். 126 மேல் ஆசிரியர் தொல்காப்பியனார் குற்றெழுத்து நெட்டெழுத்து எனப் பெயர் கூறவந்த விடத்து அப்பெயர்க்காரணம் விளங்க “ஒரளபிசைக்கும் குற்றெழுத்து, ஈரளபிசைக்கும் நெட்டெழுத்து” என அவற்றின் மாத்திரைகளையும் உடம்பொடு புணர்த்துக் கூறினார். எல்லா எழுத்துக்களுக்கும் மாத்திரை கூறும் பகுதியாகிய எழுத்துக்களின் மாத்திரை இலக்கணம் கூறும்வழி நன்னூலார் இவற்றை இயைத்துக் கூறியுள்ளார்.
மூவள பிசைத்தல் ஒரெழுத் தின்றே. (தொல். 5) மேலே இரண்டு சூத்திரங்களிலும் ஒரு மாத்திரையாக இசைக்கு மெழுத்துக்கள் குற்றெழுத்தெனவும், இரண்டு மாத்திரையாக இசைக்கு மெழுத்துக்கள் நெட்டெழுத்தெனவும் கூறியவழி, மூன்று மாத்திரையளவாக ஒலிக்கும் ஒரெழுத்து