பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூன்மரபு

33


முண்டோ என்று ஐய நிகழுமாகலின் அதனையகற்ற எழுந்தது இச்சூத்திரமென்க.

 இ-ள்) ஒரெழுத்தே நின்று மூன்று மாத்திரையளவாக ஒலித்தலில்லை (எ-று)
 எனவே பலவெழுத்துக் கூடியவிடத்து மூன்று மாத்திரையும் நான்கு மாத்திரையும் இசைக்கும் என்பர் நச்சினார்ககினியர்.
 இதனால் இயற்கை நிலையிலுள்ள ஓரெழுத்து மூன்று மாத்திரையளவாக ஒலித்தலில்லை யென்பதே ஆசிரியர் கருத்தாதலறியலாம்.
       நீட்டம் வேண்டின் அவ்வள புடைய 
       கூட்டி எழுஉதல் என்மனார் புலவர்.   (தொல், 8)

மேல் ஓரெழுத்து மூன்று மாத்திரையளவாக ஒலித்தலில்லை யெனவே இரண்டு மாத்திரை பெற்ற எழுத்து, ஓசையும் பொருளும் காரணமாக நீண்டொலித்தலை வேண்டின், என் செய்வ தென்றார்க்கு இதனால் மாத்திரை நீளுமாறு கூறுகின்றார்.

 இ-ள்) இரண்டு மாத்திரை பெற்ற எழுத்து அம்மாத்திரை யின் மிக்கொலித்தலை விரும்புவராயின் அம்மாத்திரையினைத் தருதற்குரிய எழுத்துக்களைக் கூட்டியெழுப்புக என்று கூறுவர் புலவர்-எ-று.
 இதனால் நெட்டெழுத்துக்கள் தாமே இரண்டு மாத்திரை யின்மிக்கு மூன்று மாத்திரையளவாக ஒசைமிக்கு நில்லா என்பதும் அங்ஙனம் அவை மூன்று மாத்திரை முதலாக நீண்டொலித்தலை வேண்டுவோர் அவற்றிற்கு இனமொத்த மாத்திரையுடைய எழுத்துக்களைக் கூட்டி இசைத்தல் வேண்டு மென்பதும் ஆசிரியர் கருத்தாதல் பெறப்படும். அங்ஙனம் கூட்டியெழுப்புமாறு “குன்றிசை மொழிவயின்”, “ஐ ஒள வென்னும்” (மொழி மரபு 8, 9 என்பனவற்றால் கூறப்படும்.
 “அவ்வளபுடைய” எனப் பன்மை கூறியவதனான் ஒத்த ஒரெழுத்தேயன்றி, செறாஅ அய் வாழிய’ என்றாங்கு இரண் டெழுத்தினைக் கூட்டி நான்கு மாத்திரை கோடலும் தழுவிக் கொள்ளப்பட்டது. இவ்வாறு நான்கு மாத்திரையாக ஈரளபு பெறுதல் “செய்யுட்களோசை சிதையுங்கால் ஈரளபும் ஐயப்