உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூன்மரபு

39



         அவ்விய னிலையும் ஏனை மூன்றே. (தொல். 12)
    இது சார்பிற்றோற்றத்து மூன்றற்கும் அளபு கூறுகின்றது. 
   (இ-ள்) ஒழிந்த சார்பிற்றோற்றத்துவரும் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்றெழுத்துக்களும் முற்கூறிய அரை மாத்திரையாகிய அவ்வியல்பின் கண்ணே நிற்பனவாம்.

எ-று.

     அரையளபு குறுகல் மகர முடைத்தே 
     இசையிட னருகுந் தெரியுங் காலை. (தொல். 13) 
  இது, மெய்களுள் மகரம் தன் அரைமாத்திரையிற் குறைந்து சிலவிடத்து வருமென்கின்றது.
  இ~ள்) தன் அரைமாத்திரையினுங்குறுகி வருதலை மகர மெய் யுடைத்து; ஆராயுங் காலத்து அது வேறெழுத்தினது ஒசையின்கண் சிறுபான்மையாகி வரும் எ-று.
 ஆசிரியர் இங்ஙனம் மகரமெய் தன் அரை மாத்திரை யினுங் குறுகிவருமெனப் பொதுப்படக்கூறினார். உரையாசிரியர் இளம்பூரணர் அதன் மாத்திரைச்சுருக்கத்தினை வரையறுத்து எல்லை கூறுதல்வேண்டி அரையளபு குறுகல் மகரமுடைத்தே” என்பதற்கு “அரையளபாகிய எல்லையிற் குறுகிக் கால்மாத்திரை யாதலை மகரமெய்யுடைத்து” என உரையிற் கோடலால் கால் மாத்திரை பெறுமென வரையறை கூறியுள்ளார். இதனைத் தழுவியே நச்சினார்க்கினியரும் நன்னூலார் முதலிய பின்னூலாரும் மகரக் குறுக்கத்திற்குக் கால்மாத்திரை யெல்லையாதலை வரையறுத்துக் கூறியுள்ளார்கள். - 
               ‘கால் குறண்மஃகான் எழுத்தியல்-4) 
 என்பது நன்னூல் சூத்திரத்தொடர்.
 உ-ம்: போன்ம், மருண்ம், தரும்வளவன், எனவரும்.
      உட்பெறு புள்ளி யுருவா கும்மே. (தொல், 14)
  இது பகரத்தோடு மகரத்திடை வரிவடிவு வேற்றுமை செய்கிறதெனக்கொண்டு உரையாசிரியரும் நச்சினார்க்கினி யரும் புறத்துப்பெறும் புள்ளியோடு உள்ளாற் பெறும் புள்ளி மகரத்திற்கு வடிவாம் எனப் பொருளுரைப்பர். இதன்கண் பகர வடிவையும், மகரவடிவையும் சேர்த்தற்குரிய இன்றியமையாமையும், இச்சூத்திரத்தின்கண் அங்ஙனம் சேர்த்துரைத்தார் ஆசிரியர் என்பதற்குரிய சொற்கிடக்கையும் காணப்படாமையான் இச்சூத்திரத்தாற் சுட்டப்பட்ட உண்மைப்பொருள் அது வெனக்