உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூன்மரபு

43



செய்ய எண்ணிய பிற்காலத்தார் குறில்களின் தலையிற் புள்ளியிடும் பழைய முறையினை மாற்றி நெடில்களின் கோட்டினைக் கீழ்விலங்கு போலச் சிறிது வளைத்தெழுதுதலை வழக்கமாகக் கொள்வாராயினர்.

   புள்ளி யில்லா எல்லா மெய்யும் 
   உருவுரு வாகி யகரமொ டுயிர்த்தலும் 
   ஏனை யுருவோ டுருவுதிரிந் துயிர்த்தலும் 
   ஆயி ரியல வுயிர்த்த லாறே. தொல். 17) 
   இஃது உயிருமெய்யுங் கூடுமாறுணர்த்துகின்றது. 
 (இ-ள்) எல்லா மெய்களும் புள்ளி யில்லையாம்படியாக, தத்தம் முன்னைவடிவே பின்னும் வடிவாகவே அகரத்தோடு கூடியொலித்தலும், ஒழிந்த உயிர்களோடு வடிவு வேறுபட்டு ஒலித்தலும் ஆகிய அவ்விரண்டு இயல்பினையுடைய, அவையொலிக்கு முறைமைக்கண் எறு.
 1. புள்ளியில்லையாதல்-தத்தம் முன்னை வடிவே வடிவாக அகரத்தோடுயிர்த்தல். க, ங், ய என வருதல்.
 2. ஏனையுயிரோடு உருவு திரிந்து வருதலாவது, “மேலுங் கீழும் புள்ளிபெற்றும், புள்ளியுங்கோடும் உடன் பெற்றும் உயிர்த் தலாம். கி, கீ, முதலியன மேல் விலங்கு பெற்றன. கு, கூ, முதலியன கீழ்விலங்கு பெற்றன. கா., கா, முதலியன புள்ளி பெற்றன. “அருகே பெற்ற புள்ளியை இககாலத்தார் காலாக எழுதினார் கொ, கோ, ங்ொ, ங்ோ, என்பன புள்ளியுங் கோடும் உடன் பெற்றன என்பர் நச்சினார்க்கினியர். இங்ஙனந் திரிந் தொலிப்பவே உயிர்மெய் பன்னிரு பதினெட்டு இருநூற்றொரு பத்தாறு ஆயின.
 “உயிர்மெய்” என்பதனை ஒற்றுமை கொள்வழி உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையெனவும், வேற்றுமை கொள்வழி உம்மைத் தொகையெனவுங் கொள்க’ என்பர் இளம்பூரணர். ஆசிரியர், உயிர்மெய்யென்பதனை வேற்றுமை நயங் கருதியே கூறுகின்றாராகலின், உம்மைத் தொகையெனக் கொண்டார் நச்சினார்க்கினியர். சூத்திரத்தில் ‘இல்லாக என்பது இல்லா என நின்றது என்பர் இளம்பூரணர்,
 இங்ஙனம் மெய் உயிரோடு கூடி ஒலிக்கும் நிலையில் உயிரளவாய் அடங்கி நிற்றல் காரணமாக மெய்யோசை ஆண்டுத் தோன்றாது என்பாருமுளர். “மெய்யோடியையினும்