பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூன்மரபு

45


   நின்ற நெறியே உயிர்மெய் முதலிறே. (நன். 109) 

என வேற்றுமை நயங்கருதி விதி கூறிச்செல்லுதலும் நோக்கத்தக்கது.

   வல்லெழுத்தென்ப, க, ச, ட, த, ப, ற. - (தொல். 19
   மெல்லெழுத்தென்ப, ங், ஞ, ண, ந, ம, ன. (தொல், 20)
   இடையெழுத்தென்ப ய, ர, ல, வ, ழ, ள. (தொல், 29
 இம்மூன்று சூத்திரங்களாலும் மேற்கூறப்பட்ட மெய்களை வன்மை, மென்மை, இடைமையாகிய பிறப்பியற்பிரிவான் வேறு படுத்துகின்றார் தொல்காப்பியனார்.
 வல்லென்றிசைத்தலானும் வல்லென்ற தலைவளியாற் பிறத்தலானும் வல்லெழுத்தெனப்பட்டன எனவும், மெல்லென்றிசைத்தலானும், மெல்லென மூக்கு வளியாற் பிறத்தலானும் மெல்லெழுத்தெனப்பட்டன எனவும், இடை நிகரனவாகி ஒலித்தலானும் இடைநிகர்த்தாகிய மிடற்று வளியாற் பிறத்தலானும் இடையெழுத்தெனப் பட்டன ன்னவும் உரையாசிரியர் கூறுவர்.
 வன்மையு மென்மையும் உணர்ந்தன்றி அவற்றின் இடைப் பட்ட நிலைமை யுணரலாகாமையின், இடையெழுத்தெனப் பிற்கூறப்பட்டது.
 வல்லினத்துக் க, ச, த, ப நான்கும், மெல்லினத்து ஞ, ந, ம மூன்றும், இடையினத்து ய, வ இரண்டும் மொழிக்கு முதலாதல் நோக்கி இம்முறையே வைக்கப் பட்டனவெனவுங் கூறுவர்.
 வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என்ற பெயரால் வகைப்படுத்திய இவற்றை,
   வல்லினங் க, ச, ட, த, ப, ற, வெனவாறே. (நன். 68) 
   மெல்லினம் ங், ஞ, ண, ந, ம, ன, வெனவாறே. (நன். 69) 
   இடையினம் ய, ர, ல, வ, ழ, ள வெனவாறே. (நன். 70) 

என்ற சூத்திரங்களால் முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் எனப் பெயரிட்டு வழங்குவர் நனனுாலார்.

   அம்மூ வாறும் வழங்கியன் மருங்கின் 
   மெய்ம்மயக் குடனிலை தெரியுங் காலை. (தொல். 22)

இது தனிமெய் மயக்கத்திற்குப் பெயர் கூறுகின்றது.