இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
48
தொல்காப்பியம்-நன்னூல்
வழங்குவர். மெய்மயக்கு - தனிமெய் முன்னர்ப் பிறமெய் வந்து மயங்கும் (வேற்றுநிலை) மெய்மயக்கம். இதன்ை ஏழு குத்திரங்களால் தொல்காப்பியனார் விரித்துக் கூறுவர்.
ட, ற, ல, ள, வென்னும் புள்ளி முன்னர்க் க, ச, ப, வென்னு மூவெழுத் துரிய, (தொல். 23) (இ-ள்) ட, ற, ல, ள, என்ற நான்கு மெய்களின் முன்னர்க் க, ச, த, ப என்னும் மூன்று எழுத்துக்களும் தனித்தனி வந்து மயங்குவனவாம்: எறு.
அவற்றுள், ல, ள ஃகான் முன்னர் யவவுத் தோன்றும். (தொல். 24) (இ-ள்) முற்கூறிய நான்கனுள் லகார ளகாரமாகிய மெய்களின் முன்னர்க் க, ச, ப க்களேயன்றி யகரவகரங்களும் வந்து மயங்கும்.
இவ்விரு சூத்திர விதியையும் நன்னூலார்,
ட, ற, முன் க, ச, ப, மெய்யுடன் மயங்கும். (நன். 113) ல, ள, முன் க, ச, ப, வ, ய, வொன்றும்மே. (நன். 17)
என்ற இரு சூத்திரங்களால் கூறினார்.
ங், ஞ, ண, ந, ம, ன, வெனும்புள்ளி முன்னர்த் தத்த மிசைக ளொத்தன நிலையே. (தொல். 25)
(இ-ள்) மெல்லின மெய்கள் ஆறன் முன்னரும் முறையே அவற்றவற்றிற்கு இனமொத்த வல்லின மெய்கள் வந்து மயங்கும்.
அவற்றுள் ண னஃகான் முன்னர்க் க, ச, ஞ, ப, ம, ய, வவ் வேழுமுரிய. (தொல். 26)
(இ-ள்) ணகார ணகாரமெய்களின் முன் அவற்றிற்கின மாகிய வல்லினமெய்யே யன்றிக் க, ச, ஞ, ப, ம, ய, வ, ஆகிய ஏழு மெய்களும் வந்து மயங்குவனவாம்.
ஞ, ந, ம, வ, வென்னும் புள்ளி முன்னர் யஃகா னிற்றன் மெய்பெற் றன்றே. (தொல். 27) (இ-ள்) ஞ, ந, ம, வ, என்னும் நான்கு மெய்களின் முன்னர் யகரமெய் வந்து மயங்கும்.
மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும். (தொல், 28) (இ-ள்) மகரமாகிய மெய்யின் முன்னர்ப் பகர யகரங்களே யன்றி வகரமும் வந்து மயங்கும்.