இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நூன்மரபு
49
இந்நான்கு சூத்திர விதிகளையும் நன்னூலார்,
ங்ம்முன் கவ்வாம் வம்முன் யவ்வே. ( நன். 111) ஞ நமுன் றம்மினம் யகரமொ டாகும். (நன். :12, ணனமுன் னினங் கச ஞபமய வவ்வரும். (நன். 114) மம்முன் பயவ மயங்கு மென்ப. (நன். :15)
என்ற நான்கு சூத்திரங்களால் குறிப்பிடுவர்.
ய, ர, ழ வென்னும் புள்ளி முன்னர் முதலா கெழுத்து ங்கரமொடு தோன்றும். (தொல், 29) (இ-ள்) ய, ர, ழ, என்னும் மெய்களின் முன்னர் மொழிக்கு முதலாகும் க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, என்னும் ஒன்பது மெய்களும், முதலாகாத வகர மெய்யும் வந்து மயங்கும்.
நன்னூலார் முதலாகாத ககரம் அவ்வையொட்டி முதலாகுமெனக் கொண்டாராதலின் இவ்விதியை,
ய, ர, ழ, முன்னர் மொழிமுதன் மெய்வரும், (நன். 16) என்ற சூத்திரத்தாற் சுட்டினார்.
ஆசிரியர் தொல்காப்பியனார் பின்னிற்கும் மெய்களைத் தொகுத்து இவை இவற்றின் முன் மயங்குமெனச் சூத்திரம் செய்தலும், நன்னூலார் முன்னிற்கு மெய்களைத் தொகுத்து அவைகளோடு இன்னின்ன மெய்கள் வந்து மயங்குமெனக் கூறலும் இவ்விருவர் செய்த சூத்திரங்களையும் நோக்கிற் புலனாம்.
மெய்ந்நிலைச் சுட்டி னெல்லா வெழுத்தும் தம்முன் தாம் வரூஉம் ர ழ வ ல ங் கடையே. (தொல். 30) இது நிறுத்த முறையானே உடனிலை மயக்கமாமாறு கூறுகின்றது.
(இ-ள்) பொருள் நிலைமையைக் கருதின் எல்லா மெய் களும் தம்முன் தாம் வந்து மயங்கும்; ரகர ழகரங்கள் அல்லாத விடத்து எ-று.
மெய்ந்நிலைச்சுட்டின் என்றதனால் தனிமெய்முன்னர் உயிரேறிய மெய் வருமெனக்கொள்க. எல்லாமென்றது ரகர ழகர மொழிந்தவற்றை. இவ் வுடனிலைமயக்கத்தை நன்னூலார்,
ர ழ வ ல் ல ன தம்முற் றாமுட னிலையும். (நன். 118)
என்றதனாற் குறிப்பிட்டார்.