உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

தொல்காப்பியம்-நன்னூல்



  ‘குறுகலும் என்புழி உம்மை, புணரியல் நிலையிடையும் என மாற்றியுரைக்கப்பட்டது.
  “யகரம் வரும்வழி யிகரங்குறுகும், உகரக் கிளவி துவரத்தோன்றாது.” (410 என்ற சூத்திரத்து அறுவகைக் குற்றிய லுகரவிற்றின் முன்னும் யகர முதன்மொழி வருமொழியாய் வருமிடத்து நிலைமொழிக் குற்றுகர வெழுத்து முற்றத் தோன்றாது; ஆண்டோர் இகரம் வந்து அரைமாத்திரை பெற்று நிற்கும்” எனக்கூறிய விதியை ஈண்டுச் சுட்டினார். இது மொழி வாமென்னும் உத்தி
  (உ-ம்) நாகியாது, வரகியாது, தெள்கியாது, எஃகியாது, கொக்கியாது, குரங்கியாது எனவரும். யகரம் இடம், உகரஞ் சார்ந்த வல்லெழுத்துப் பற்றுக்கோடு.
   இவ்விருவகைக் குற்றியலிகரத்தையும் நன்னூலார்,
     யகரம் வரக்குற ளுத்திரி பிகரமும் 
     அசைச்சொன் மியாவி னிகரடிங் குறிய, (நன். 93)

என்பதனால் தொகுத்தோதினார்.

   ஆறீற்றுக் குற்றியலுகரமும் யகரம் வரும்வழி யிகரமாகத் திரியுமென்பர் பவணந்தியார். “யகரம் வரக்குறள் உதிரியிகரம்” என்பது காண்க. குற்றுகரங்கெட்டு இகரந் தோன்றுமென்பதே தொல்காப்பியனார் கருத்தாகும்.
   நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யிற்றுங் 
   குற்றிய லுகரம் வல்லா றுணர்ந்தே. (தொல். 36)
   இஃது ஒருமொழிக் குற்றுயலுகரத்திற்கு இடமும் பற்றுக் கோடுங் கூறுகின்றது.
   {இ-ள்) நெட்டெழுத்தின் பின்னும் தொடர்மொழி யிறுதி யிலும் வரும் வல்லெழுத்து ஆறினையும் ஊர்ந்து குற்றியலுகரம் நிற்றலை வேண்டும் ஆசிரியன்.
   நிற்றல் வேண்டும் என்பது ஈண்டும் கூட்டப்பட்டது என்பர் உரைகாரர்.
   ‘நெட்டெழுத்திம்பரும் தொடர்மொழியீறும் இடம். வல்லெழுத்துப் பற்றுக்கோடு. இவ்வாறு இடமும் பற்றுக்கோடும் கூறவே, மொழிக்கு ஈறாதலும் கூறியவாறாயிற்று என்பர் இளம் பூரணர்.