இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
72
தொல்காப்பியம்-நன்னூல்
இஃது எய்தியது ஒருமருங்கு மறுத்தது.
இ-ள்) மேற் கூறப்பட்ட மூன்றனுள்ளும் ரகாரமும், ழகாரமும் குறிற்கீழ் ஒற்றாய் வாரா. எறு.
எனவே அவை நெடிற்கீழ் ஒற்றாம்; குறிற்கீழ் உயிர் மெய்யாம்.
(உ-ம்) தார், தாழ் என நெடிற்கீழ் ஒற்றாய் நின்றன. கரு, மழு, எனக் குறிற்கீழ் உயிர்மெய்யாய் நின்றன. இவ்வாறு இரண்டையும் விலக்கினமையின் ஒழிந்த யகரம், பொய், நோய் என ஈரிடத்தும் வருமென்பதாம். குற்றொற்று குறிதாகிய ஒற்று எனப் பண்புத் தொகை குறிற்கீழ் நிற்றலான் குறியதெனப் பட்டது’ என்பர் உரையாசிரியர். கீழ் என்னும் உருபு தொகுத்துக் கூறினாரென்பர் நச்சினார்க்கினியர். எனவே அவர் குற்றொற் றென்பதனை வேற்றுமைத் தொகையாகக் கொண்டார் என்பது புலனாம்.
இவ்விரண்டு சூத்திரத்தாலும் கூறப்பட்ட விதியை நன்னூலார் உடனிலை மயக்கத்தின்கீழ்வரும்,
ய, ர, ழ, வொற்றின்முன் க,ச,த,ப, ங்,ளு,நம, ஈரொற் றாம்;ரழத் தனிக்குறி லனையா. (நன். 119)
என்ற சூத்திரத்தால் தொகுத்துக் கூறினார்.
குறுமையும் நெடுமையு மளவிற் கோடலிற் றொடர்மொழி யெல்லாம் நெட்டெழுத் தியல. (தொல். 50,
இது மேலைச் சூத்திரத்தின் மேலெழுந்த ஐயம் அகற்று கின்றது.
(இ-ள்) உயிரெழுத்திற்குக் குறுமையும், நெடுமையும், மாத்திரையென்னும் அளவுபற்றிக் கொள்ளப்படுதலின் தொடர் மொழி இறுதியில் நின்ற ரகார ழகாரமெல்லாம் நெடிற்கீழ் நின்ற ரகார ழகாரங்களின் இயல்பையுடையனவாம்- (எ-று).
என்றது, மேலைச் சூத்திரத்து ர, ழ, என்பன குறிற்கீழ் ஒற்றாகா என்று கூறியது கொண்டு குற்றெழுத்தின் பின்னதாய் யாண்டும் ரகார, ழகாரம் வாரா என்பது கருதிப் புகர, புகழ என்பன யாண்டடங்கு மென்பாரை நோக்கிப் புகழ், புலவர் என்றாற்போல அக்குறில்கள் இணைந்து நிற்க அவற்றைத் தொடந்துவரின் அக்குறிலினைகளும் நெடிலின் தன்மையை யுடையன வாதலான், அவற்றின்பின் வரும் ரகர ழகரங்களும்