பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிமரபு

73



நெட்டெழுத்தின்பின் நின்றனவாகவே கொள்ளப்படுமென்ற வாறாம்.

  இவ்வாறன்றி நச்சினார்க்கினியர், இச்சூத்திரம் “அளபிறந் துயிர்த்தலும்” என்னுஞ் செய்யுளியலை நோக்கிய நூன்மரபிற் சூத்திரத்திற்குப் புறனடையாய் அதன்கண் உயிரும் உயிர் மெய்யும் அளபிறந்து இசைக்குங்காற் குறிலோ நெடிலோ இசைப்பதென மாணாக்கர்க்கு நிகழ்வதோர் ஐயம கற்று கின்றதெனக் கருத்துரைத்து, இச்சூத்திரத்து “நெட்டெழுத்தியல” என்ற தொடர்க்கு “நெடிற்கீழ் நின்ற ரகார ழகாரங்களின் இயல்பையுடையவாம்” என உரையாசிரியர் உரைத்த வழியே உரையாது, இயல என்பதனைச் செயவென்னும் வாய்பாட்டு வினையெச்சமாகக் கொண்டு “எழுத்துக்களது குறிய தன்மையும் நெடிய தன்மையும் மாத்திரையென்னும் உறுப்பினைச் செவிகருவியாக அளக்கின்ற அளவு தொழிலாலே செய்யுட்குக் கொள்ளப்படுதலின் அம்மாத்திரை தம்முள் தொடர்ந்து நின்ற சொல்லெல்லாம் நெட்டெழுத்து மாத்திரை மிக்கு நடக்கும் படியாகத் தொடர்ந்த சொல்லாம் - எனப் பொருள் கூறினார்.
 அளபிறந் துயிர்த்தலும் என்ற சூத்திரம் இசை நூலில் உயிரும் ஒற்றும் தன் மாத்திரையின் நீண்டொலித்தலைக் கூறியதாதல், அச்சூத்திரத்திற்கு இளம்பூரணரெழுதிய உரையா லும் அதனைப் பிறன்கோட் கூறல் என்னும் உத்திக்கு எடுத்துக் காட்டாகப் பேராசிரியர் குறித்தலானும் புலனாமாதலின் இசை நூற்குக் கூறும் இவ்விலக்கணம் செய்யுளியலுக்குமுண்டெனச் சூத்திரச் சொற்றொடரைப் பிரித்துக் கூறுதல் பொருந்தாது. அன்றியும் செய்யுளியல் விதியை இதுமாட்டெறிந்த தென்பதற் குரிய சொற்றொடர் இதனுட்காணப்படாமையானும் ஆண்டுக் கூறப்படும் விதி அளபெடைக்கண் அடங்குமாதலானும், மேலைச் சூத்திரத்தில் குற்றொற்று எனப் பொதுப்படக் கூறியத னால் வரும் ஐயமகற்றுதல் வேண்டுமாதலானும் நச்சினார்க் கினியருரை இச் சூத்திரத்தின் கருத்தன் றென்பது பெறப்படும்.
  அன்றியும் நெட்டெழுத்தாவது, குற்றெழுத்திரண்டு நின்று நீண்டிசைப்ப தாகலின் குற்றெழுத்துக்கள் இரண்டு முதலியன வாகத் தொடர்ந்தனவெல்லாம் நெட்டெழுத்தி னியல்புடை வென்பது பொருந்தும். “நெட்டெழுத்தாவது நீரும் நீரும் சேர்ந்தாற்போலக் குற்றெழுத்து இரண்டொத்து நின்று நீண்டிசைப்ப தொன்றாகலின்” எனவரும் சிவஞான முனிவர் rr