பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


73 தொல்காப்பியம்-நன்னூல்

“அகரத் திம்பர் யவகரப் புள்ளியும் ஐஒள நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்” எனப் பாடத்தினைத் திரித்துப் புதுப்பொருள் கொள்ளுதல் முற்றும் பொருந்தாத தொன்றாம்.

சிவஞான முனிவர் “அம்முனிகரம் என்னும் எழுத்துப் போலி யுணர்த்தும் நன்னூற் சூத்திரத்தினைச் சந்தியக்கரம் உணர்த்திற்றாகக் கொண்டு, அகரமும் யகர மெய்யும் இகரமுங் கூடி ஐயென்னும் எழுத்தாக வொலிக்கும் எனவும், அவ்வாறே அகரமும் வகரமெய்யும் உகரமுங் கூடி ஒளவென்னும் எழுத்தாக வொலிக்கும் எனவும் பொருள்கூறி, இக்கருத்தேபற்றி ஆசிரியர், “அகர விகர மைகாரமாகும்” “அகரவுகர மெளகாரமாகும்” எனக்கூறி ஐயென்னும் நெட்டெழுத்து வடிவு புலப்படுத்தற்கு எனக்கூறி ஐயென்னும் நெட்டெழுத்து வடிவு புலப்படுத்தற்கு அகரஇகரங்களேயன்றி அவற்றினிடையே யகரமு மொத் திசைக்கு மென்பார். “அகரத்திம்பர் யகரப்புள்ளியும்-ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்” என்றும், மெய்பெற வென்ற விலேசானே, ஒளவென்னும் நெட்டெழுத்தின் வடிவு புலப்படுத்தற்கு அகர வுகரங்களேயன்றி அவற்றினிடையே வகரமும் ஒத்திசைக்கும் என்றும், இம்பர் உம்பர் என்றார் போல்வன காலவகை இடவகைகளான் மயங்கு மாகலின் முதற் கண் நிற்பது யாதோ இறுதிக்கண் நிற்பது யாதோவென்னும் ஐய நீக்குதற்கு “இகர யகர மிறுதி விரவும்” என்றுங் கூறினார் எனவும் சூத்திரவிருத்தியுள் குறிப்பிடுவர்.

“அகர விகரமைகாரமாகும்”, “அகரவுகரமெளகாரமாகும்” என இரு சூத்திரத்தும் அவற்றின் விதியை ஆசிரியர் முடித்துக் கூறினாராதலானும், அகரத்தின் பின்னர் இகரமேயன்றி யகரப் புள்ளிவரினும் ஐகாரம் போல விசைக்குமென்பதற்கே, “அகரத் திம்பர் யகரப் புள்ளியும் - ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்” என ஆசிரியர் உம்மை கொடுத்துக் கூறினாராதலானும் இச் சூத்திரத்து மெய்பெற என்றது, இலேசாய் வந்ததன்றி, அகரமும் யகரப்புள்ளியும் கூடி ஐகாரம் போல வொலிக்கும் பொழுது உயிரீறாக ஒலிக்கும் இயற்கை ஐகார வீறுபோலன்றி இப்போலியிறு மெய்யோசைபெறத் தோன்றி யிசைக்குமென்ற வேற்றுமையை விளக்குதற்கு வந்த அடைமொழியாகலானும், அவர் கூறியவாறு அ, ய், இ, என்ற மூன்றுங்கூடி ஐயெனவும்,