இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மொழிமரபு
79
அ, வ், உ, என்ற மூன்றுங்கூடி ஒளவெனவும் ஒலிக்குமெனின், அவ்விடத்து ஐ, ஒள வென்ற ஒலியின் வேறாக அய்பி, அவ்வு, என மாத்திரைமிக்கு ஒலி வேறு பட்டிசைத்தலானும், “இகர யகர மிறுதிவிரவும்” என்ற சூத்திரம் இகரமும் யகரமும் ஒரு மொழியின் இறுதிக்கண் நாய் நாஇ என விரவி இறுதிப் போலியாய் வருதலைக் குறித்த வேறு சூத்திரமாகலின் 54ம் சூத்திரமாகிய இதற்கும் 58-ம் சூத்திரமாகிய அதற்கும் இடையே ஐகாரக் குறுக்கம்பற்றிய சூத்திரம் அமைந்திருத்தலால் சந்தியக்கரம் கொள்ளுதற்குரிய தொடர்பின்மையானும் ஐ, ஒள வென்பனவற்றைச் சந்தியக்கரமாகக் கோடல் தொல்காப்பிய னார் கருத்தன்றாதல் புலப்படும்.
அன்றியும் சூத்திரங்கள் ஐகார ஒளகாரங்களின் கூட்டொலியினை உணர்த்தினவாயின் ஆசிரியர் இயற்கைப் பொருளை இற்றெனக் கூறாது செயற்கைப் பொருளுக்குரிய ஆக்கங்கொடுத்துச் சொல்லுதல் பொருந்தாது. எனவே இச் சூத்திரங்கள் செயற்கை யோசையாய்ப் போலியெழுத்துணர்த் தின எனவே படும். நன்னூலார்க்கும் இதுவே கருத்தாதல் “அம்முனிகரம்” என்ற சூத்திரத்திற்குச் சங்கர நமச்சிவாயர் உரைத்த உரையாற்புலனாம்.
ஒரள பாகு மிடனுமா ருண்டே தேருங் காலை மொழிவயி னான. (தொல். 57,
இஃது உயிர்களுள் ஒன்றற்கு மாத்திரைச் சுருக்கம் கூறுகின்றது.
(இ-ள்) ஐகாரம் ஆராயுங் காலை மொழிக்கண் ஒரு மாத்திரையாய் நிற்குமிடமும் உண்டு.
(உ-ம்) இடையன், குவளை என வரும்.
மேலைச் சூத்திரத்தில் ஐகாரம் அதிகாரப்பட்டமையால் இவ்விதி ஐகாரமொன்றற்கே யுரித்தாமெனக் கொண்ட உரையாசிரியர், தேருங்காலை யென்பதனான் முதற்கண் சுருங்காதெனக்கூறி, இக்குறுக்கஞ் சிறுபான்மையெனவுங் கூறிப் போந்தார்.
நச்சினார்க்கினியர் இச்சூத்திரத்து ஒளகாரத்தையுஞ் சேர்த்துரைத்து ஒளகாரக்குறுக்கமென ஒன்று கொண்டதோடு அமையாது, உரையிற் கோடலால் ஐகாரம் முதலிடைகடை