மொழிமரபு
81
(உ-ம் நாய், நாஇ எனவரும். இப்போலியினை இறந்தது விலக்கலென்னும் உத்தியால் தன்னு லார் தம் நூலிற் கூறர்தொழிந்தார்.
மொழிமுதல் எழுத்துக்கள்
பன்னி ருயிரும் மொழிமுத லாகும். (தொல். 59) உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா. (தொல். 80) க, த, ந, ப,மவெனு மாவைத் தெழுத்தும் எல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே. (தொல். இரு
என்ற சூத்திரங்களால் மொழிக்கு முதலாமெழுத்தை உணர்த்த வந்த ஆசிரியர், பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் மொழிக்கு முதலாம் எனவும், உயிரோடு கூடிய மெய்யல்லாதனவாகிய தனி மெய்கள் மொழிக்கு முதலாகா, உயிரோடு கூடின மெய்களே முதலாவன எனவும், அங்ஙனம் உயிரோடு .. முதலானவற்றுள் க, த் ந, ப, ம என்னும் ஐந்து மெய்களும் பன்னிருயிரோடும் மொழிக்கு முதலாவனவெனவும் கூறிப், பின்னர்வரும் “62 முதலிய நான்கு சூத்திரங்களால் ச, வ, ஞ, ய என்ற நான்கு மெய்களும் பன்னிருயிர்களில் இன்னின்ன எழுத்துக்களோடும் கூடி மொழிக்கு முதலாகுமென்கின்றார்.
நன்னூலாசிரியர், மூன்று சுட்டும் பா வினாவும் எகர
வினாவுமாய இடைச் சொற்களின் பின் அகரத்தை ஒட்டி வவ்வும் அங்கனம், இங்ஙனம், உங்ஙனம், யாங்கனம், எங்கனம் என ஒருவாற்றான் மொழிக்கு முதலாமெனக் கொண்டார். அதனால்,
சுட்டியா வெகர வினாவழி யவ்வை ஒட்டி வவ்வும் முதலா கும்மே. இதன். (நன்.106)
எனத் தாம் சூத்திரஞ் செய்ததற்கேற்ப நகரத்தையும் தொல் காப்பியனார் குறித்த க, ச, த, ந, ப, ம, வ, ய, ளு என்னும் ஒன்பதனோடுங் கூட்டி இப் பத்துமெய்யும் மொழிக்கு முதலா மெனக்கொண்டு,
பன்னி ருயிருங் கசதந பமவய ஞங் விரைந் துயிர்மெய்யு மொழிமுதல். (நன்.102)
எனச் சூத்திரஞ் செய்தனர். அங்ஙனம் முதலாய சொற்களில் ங்னமென்பது, தனியே நின்று பொருள்தராது சுட்டு வினாவாகிய எழுத்துக்களை யொட்டி நின்று ஒரு சொல்லாய்ப்