இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மொழிமரபு
83
அ, ஆ, எ, ஒவ்வொ டாகு ஞம்முதல். (நன். 105)
என அகரத்தையுஞ் சேர்த்துக் கூறினார்.
ஆவோ டல்லது யகர முதலாது. (தொல். 65) இ-ள்) யகரவொற்று ஆகாரத்தோடு கூடியல்லது மொழிக்கு முதலாகாது என்பதாம்.
ஆகாரவுயிரோடன்றி யகரமெய் மொழிக்கு முதலாகா தெனத் தொல்காப்பியர் வரையறுத்து விதி கூறியிருக்கவும், நன்னூலாசிரியர், யவனம், யாகம், யுத்தி, யூகம், யோகம், யெளவனம், என்றற்றொடக்கத்து வடமொழிச் சொற்களில் அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள, என்பவனவற்றோடு யகரம் முதலாய் வருதல் கருதி ஆகாரத்தோடு அவற்றையுஞ் சேர்த்து,
அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள, யம்முதல், (நன். 104)
என முதனுால் விதியொடு மாறுபடச் சூத்திரம் செய்துள்ளார். தமிழிலக்கணங் கூறுமிடத்து வடமொழி இலக்கணத்தையுங் கூட்டி உரைத்தல் கடிசொல் இல்லைக் காலத்துப் படினே என்னும் விதியொடு பட்டதாகும்.
முதலா வேன தம்பெயர் முதலும். (தொல். 66)
(இ-ள்) மொழிக்கு முதலாகாத ஒழிந்த மெய்களும் எழுத்துக்களாகிய தம் பெயர் கூறும் வழி மொழிக்கு முதலாம் எ-று.
முதலாயின மெய்கள்:- க த ந ப ம வ ச ஞ ய என்பன.
முதலாகாத மெய்கள்:- ங் ட ண ர ல ழ, ள ற ன என்பன
(உ-ம்) ங்க்களைந்தார், டப்பெரிது என வரும்.
இப்புறனடை விதியோடு மெய்ம்மயக்கப் புறனடையுங் கூட்டி,
தம்பெயர் மொழியின் முதலும் மயக்கமும் இம்முறை மாறிய மியலு மென்ப, (நன். 121)
எனச் சூத்திரஞ் செய்தார் நன்னூலார்.
குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். (தொல். 67)
இது சார்பெழுத்தினுள் ஒன்றாகிய குற்றியலுகரமும் ஒருவாற்றான் முதலாமாறு கூறுகின்றது.