இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
84
தொல்காப்பியம்-நன்னூல்
(இ~ள்) குற்றியலுகரமானது முன்னிலை முறைப் பெயரிடத்துத் தனிமெய்யாய் நின்ற நகரத்தின்மேலுள்ள நகரத்தோடு கூடி மொழிக்கு முதலாம். எ-று.
இவ்வாறு குற்றியலுகரம் மொழிக்கு முதலாதல் கூறவே அம் மொழிமுதற் குற்றியலுகரத்திற்கு இடம் நுந்தையென்னும் முறைப்பெயரென்பதும், பற்றுக்கோடு நகரவொற்றின் மேலுள்ள நகரமென்பதும் கூறியவாறாயிற்று.
(உ-ம்) துந்தை என வரும். இவ்விதி நன்னூலார்க்கு உடன்பாடன்மையின் அவர் கூறாதொழிந்தாரென்பர் சங்கர நமச்சிவாயர்,
முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ தப்பெயர் மருங்கி னிலையிய லான. (தொல். 68)
இது மேலதற்கோர் புறனடை கூறுகின்றது.
(இ-ள்) நுந்தையென்னும் முறைப் பெயரிடத்து நின்ற குற்றியலுகரம், முற்றுகரத்தோடு பிற குற்றியலுகரம் பொருள் வேறுபடுமாறு போன்று பொருள் வேறுபடாது. எ-று.
நாகு, நகு என முறையே குறுகியும், குறுகாதும் நின்ற உகரங்கள்போல, நுந்தையென்பதன் உகரம், குறுகிய வழியும் இதழ்குவித்துக் கூறக் குறுகாதவழியும் பொருளும் இடனும் பற்றுக்கோடும் மாறுபடாதென்பதாம்.
அம்முறைப் பெயரிடத்தே நிற்றலிக்கனமான குற்றிய லுகரம், இதழ்குவித்துக் கூறும்வழி வரும் முற்றுகரத்தோடு அவ்விடத்துக் குற்றுகரம் பொருள் வேறுபடுமாறுபோல ஈண்டுப் பொருள் வேறுபட்டு நில்லாது எனப் பொருள்கூறி,
காது, கட்டு, முருக்கு, கத்து, தெருட்டு என்பன இதழ் குவித்துக் கூறியவிடத்து முற்று கரமாய் முன்னிலையே வ லுணர்த்தியும், இதழ்குவியாமற் கூறியவிடத்துக் குற்றுகரமாய்ப் பெயர்ப் பொருள் தந்தும் பொருள் வேறுபட்டு நின்றாற்போல, ஈண்டு வந்த துந்தை என்னும் முறைப் பெயரிடத்து உகரம், இதழ் குவித்து முற்றக் கூறியவிடத்தும் இதழ்குவியாமற் குறையக் கூறியவிடத்தும் பொருள் வேறுபடாதென்பதனை இதனால் ஆசிரியர் கூறினாரென விளக்கியுரைத்தார் நச்சினார்க்கினியர்.