பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிமரபு

87



    உப்பகா ரரொடு ஞகாரையு மற்றே 
    அப்பொரு னிரட்டா திவனை யான. (தொல். 80)
  (இ~ள்) உகரத்தொடு கூடிய பகரம் தபு என ஒரு மொழிக்கு ஈறாதல்போல, ளுகார வொற்றும் உரிஞ் என்னும் ஒரு மொழிக்கே ஈறாகும். இவ்விடத்து அச்சொல்லின் பொருள் தன்வினை பிறவினையாய் இரு பொருள் படாது, தன்வினை யென்றற்கே உரியதாகும். எ-று.
  நெடுங்கணக்கு முறைப்படி நகரத்தின்முன் ஞகரத்தைக்

கூறுதல் முறையாயினும், நகரம் இருமொழிக் கீறாதல்பற்றி ஒரு மொழிக்கீறாகும் ஞகரத்தினை அதன் பின்னர்க் கூறினார்.

     வகரக் கிளவி நான்மொழி பீற்றது. (தொல். 81)
    (இ-ள்) வரமாகிய மெய்யெழுத்து நான்கு மொழியின்கண் ஈறாகும் எ-று.
     (உ-ம்) அவ், இவ், உவ், தெவ், எனவரும். 
   69 முதல் 81 வரையுள்ள சூத்திரங்களால் மொழிக்கிறாம் எழுத்துக்களைத் தொல்காப்பியனார் விரித்துரைத்தாராக, நன்னூலாசிரியர் பவணந்தியார்,
     ஆவி ஞணநமன யால வழளமெய் 
     சாயு முகரம் நாலாறும் ஈறே. (நன். 107) 

என ஒரு சூத்திரத்தால் அவற்றைத் தொகுத்து உரைத்தார்.

     மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த 
     னகரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப - 
     புகரறக் கிளந்த அஃறிணை மேன. (தொல். 32
   (இ-ள்) மகரவீற்றுச் சொல்லுடன் மயங்காவென்று வரையறுக்கப்பட்ட னரக வீற்றுச் சொற்கள் ஒன்பதென்று சொல்லுவார்கள்; அவ்வொன்பது சொற்களும் குற்றமறச் சொல்லப்பட்ட அஃறிணை யிடத்தனவாம் எறு.
   ‘அஃறிணை யென்றது ஈண்டு அஃறினைப் பெயரினை என்பர் இளம்பூரணர்.
   அஃறிணைப் பெயரின் இறுதியில் மகரம் நின்ற நிலைக் களத்து னகரம் போலியாய் வந்து மயங்கும். அங்ஙனம் போலி யாய் வந்த னகரவீற்றுச் சொற்கள் இவையென்றும், இயற்கை யாகவே னகரவீறாவன இவையென்றும் வேறுபாடறிதற் பொருட்டுத் தொல்காப்பியனார்க்கு முற்பட்ட தமிழ்ச்