பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 இன்றியமையாதது இடமாகும். தன்னேயேற்ற பெயர்ப்பொருளே இடப் பொருளாக வேறுபடுத்துவது கண்ணுருபாதலின் அஃது ஏழாம் வேற்றுமையாயிற்று. இவற்றின் வேருகப் பெயர்ப் பொருளே’ எதிர்முகமாக்குவது விளிவேற்றுமையாதலின் அஃது எட்டாம் வேற்றுமையென இறுதிக்கண் வைக்கப் பட்டது. மேற்குறித்து வேற்றுமைகள் எட்டினையும் முறையே பெயர் வேற்றுமை, ஐகார வேற்றுமை, ஒடு வேற்றுமை, குல் வேற்றுமை, இன் வேற்றுமை, அது வேற்றுமை, கண் வேற்றுமை, விளி வேற்றுமை எனப் பெயர் தந்து வழங்குதலும், இவற்றுள் ஐ முதல் கண் ஈருகவுள்ள ஆறினையும் முறையே இரண்டாவது, மூன்ருவது, நான்காவது, ஐந்தாவது, ஆரு வது, ஏழாவது என எண் முறையாற் பெயரிட்டு வழங்குதலும் தொல்காப்பியனர் காலத்தும் அவர்க்குமுன்னும் வழங்கிய தமிழியற் குறியீடுகளாகும். இவ்வுண்மை இவ்வேற்றுமையியற் சூத்திரங்களால் நன்கு புலம்ை. இனி எழுவாய் வேற்றுமை முதலிய ஏழு வேற்றுமைகளின் உருபும் உருபுநிற்கும் இடமும், அதன் பொருளும், அப் பொருளின் வகைகளும் ஆகியவற்றை இவ்வியலிற் பின்வரும் சூத்திரங்களால் ஆசிரியர் முறையே விளக்குகின்ருர், கண்கள். அவற்றுள் எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே. இது, முறையானே எழுவாய்வேற்றுமை உணர்த்துகின்றது. (இ-ன்) மேற்குறித்த வேற்றுமை எட்டனுள் முதற்கண் பெயர் என்று கூறப்பட்ட எழுவாய் வேற்றுமையாவது பெயர் தோன்றிய துணையாய் நிற்கும் நிலைமையாம் எ-று. தோன்று நிலை’ என்ற தல்ை மேற்குத்திரத்துக் கூறப் படும் அறுவகைப் பயனிலேயும் தோன்ற நிற்கும் பெயர் எழுவாய் வேற்றுமையாவது என்றவாரும் என்பர் இளம்பூரணர். பெயர் தோன்றிய துணையாய் நிற்கும் நிலமையாவது, உருபும்