பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 (உ-ம்) சாத்தன், கொற்றன், உண்டல், தின்றல் எனப் பெயர் காலந் தோன்ருது நிற்றலும், உண்டான், தின் ருன் எனத் தொழினிலே யொட்டுவன காலந்தோன்றி நிற்றலும் கண்டு கொள்க. தொழில்நிலே யொட்டுவனவாகிய இப்பெயர் களே வினையாலணையும் பெயர் என வழங்குவர் நன்னூலார். இனி இச்சூத்திரத்திற்கு தொழில் நிலப் பெயர்ச்சொல் காலந்தோன்ரு, காலம் ஒட்டும் தொழிற் பெயரல்லாதவிடத்து ?? என மற்ருெரு கருத்துரைத்து, காலந் தோன்ரு தன; உண் டல், தின்றல் என்பன; இவை அத்தொழில் மேல் நின்ற பெயர். இனிக் காலம் ஒட்டும் தொழிற் பெயராவன; உண்டான், தின்ருன் என்பன; இவை அத்தொழில் செய்வான் மேல் நின்ற பெயர் என விளக்கங் கூறுவர் இளம்பூரணர். இச்சூத்திர வுரையினே தொழிலல காலந் தோற்ரு: ) (நன்னூல்-274) என வருந் தொடராற் பவணந்திமுனிவர் புலப்படுத்தியுள்ளமை கூர்ந்துணரத்தகுவதாகும். பயனிலை கோடலும் உருபேற்றலுமாகிய பெயரிலக்கணம் ஈண்டுப் பெறப்படுதலின், அவற்ருேடியையக் காலந்தோன் ருமையாகிய பெயரிலக்கணமும் ஈண்டே கூறினர். பெரும் பான்மை பற்றிக் காலந்தோன்ரு மை பெயரிலக்கண மாயிற்று: என்பர் சேகுவரையர். எஉ. இரண்டாகுவதே, ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி எவ்வழி வரினும் வினேயே வினே க்குறிப் பவ்விரு முதலிற் ருேன்று மதுவே. இது நிறுத்த முறையானே இரண்டாம் வேற்றுமை உணர்த்து கின்றது. (இ-ள்) இரண்டாம் வேற்றுமையாவது, பெயர் ஐ ஒடு கு?’ என்னுஞ் சூத்திரத்து ஐயெனப்பெயர் பெற்ற வேற்றுமைச் சொல்லாம். அஃது யாண்டு வரினும் வினையும் வினைக் குறிப்பு மாகிய அவ்விரண்டு முதற்கண்ணுந் தோன்றும் அவை பொரு ள்ாக வரும். எ.று.