பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g? எண்ணு முறைமைக்கண் இரண்டாம் வேற்றுமையென வழங்கப் பெறுவது ஐகார வேற்றுமை என்பார், இரண்டாகு வதே, ஐயெனப் பெயரிய வேற்றுமைக்கிளவி என்ருர், தம்மையுணர்த்துவனவும் பெயரெனப்படுதலின் ஐயெனப்பெய ரிய” என்ருர் . பெயரிய என்பது பெயர் என்னும் பெயரடியாகப் பிறந்த பெயரெச்சம். வினே என்றது தெரிநிலை வினையை. குறிப்பு என்றது காலத்தினைக் குறிப்பாகவுணர்த்தும் குறிப்பு வினையை. முதல்-காரணம். ச்ெயப்படு பொருள் முதலாயின தொழிற்குக் காரணமாதலானும், அவற்றைத் தொழில் முத னிலே’ எனத் தொல்காப்பியர் வழங்குதலானும் ஈண்டு ஆசிரியரால் வினையே வினைக்குறிப்பு அவ்விருமுதல்’ என்றது, வினேயும் வினைக்குறிப்புமாகிய அவற்றின் நிலைக்களமாகத் தோன்றும் செயப்படுபொருளே. வினைமுதல் செய்யும் தொழி லின் பயனையுறுவது செயப்படு பொருளாகும். (உ-ம்: ) குடத்தை வனைந்தான், குழையையுடையன் எனவரும். குறிப்புச் சொல் காலமொடு தோன்றித் தொழிற் சொல்லாதலும் குழை முதலாயின. தொழிற் பயனுறுதலும் ஆசிரியர் துணிபாகலின் அவையும் செயப்படு பொருளாம். புகழை நிறுத்தான்; புகழை நிறுத்தல்;புகழையுடையான்; புகழையுடைமை என இரண்டாம் வேற்றுமை பெயரொடு தொடர்ந்த வழியும் வினைச் செயப்படுபொருளும் குறிப்புச் செயப்படு பொருளும் பற்றியே நிற்கும் என்பார், எவ்வழி வரினும் என்ருர் . இயற்றப்படுவது, வேறுபடுக்கப்படுவது, எய்தப்படுவது எனச் செயப்படுபொருள் மூவகைப்படும். இயற்றுதலாவது முன்னில்லதனை யுண்டாக்கல். வேறு படுத்தலாவது முன்னுள் ள தனத் திரித்தல் எய்தப் படுதலாவது இயற்றுதலும் வேறு படுத்தலுமின்றித் தொழிற் பயனுறுந் துணையாய் நிற்றல். இரண்டாம் வேற்றுமையுருபை முடித்தற்கு அடுத்துவரும் சூத் திரத்துக் கூறப்படும் காப்பு, ஒப்பு முதலிய வாய்பாடு பற்றி வரும் இம்மூவகையானும் பகுத்துரைப்பவர் ஈண்டு வினையும் வினைக் குறிப்பும் என அவற்றை இரண்டாக அடக்கிக் கூறினர்.