பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 அன்ன பிறவும் என்ற தல்ை, பகைவரைப் பணித்தான், சோற்றை அட்டான், குழையை உடையான், பொருளை இலன் என்னுந் தொடக்கத்தன கொள்ளப்படும். காப்பு முதலாயின பொருள்பற்றி ஒதப்பட்டமையால், அப் பொருள் பற்றிவரும் புரத்தல், அளித்தல், நிகர்த்தல், ஒட்டுதல், செலுத்துதல், கடாவுதல் என்பன போல்வன வெல்லாவற்றை யும் இரண்டாம் வேற்றுமைப் பொருள்களாக அடக்கிக் கொள்க. இரண்டாம் வேற்றுமை உருபும் பொருளும் பற்றிய தொல்காப்பியச் சூத்திரங்களே அடியொற்றியமைந்தது, 295, இரண்டாவதனுரு பையே யதன் பொருள் ஆக்கல் அழித்தல் அடைதல் நீத்தல் ஒத்தல் உடைமை யாதியாகும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். இரண்டாம் வேற்றுமையினது உருபு முற்கூறிய ஐகாரம் ஒன்றுமே. அதன் பொருள்களாவன தன்னையேற்ற பெயர்ப் பொருளே ஆக்கப்படு பொருளாகவும் அழிக்கப்படு பொருளா கவும் அடையப்படு பொருளாகவும் துறக்கப்படு பொருள்ாகவும் ஒக்கப்படு பொருளாகவும் உடைமைப் பொருளாகவும் இவை போல் வன பிறவாகவும், வேற்றுமை செய்தலாம்?? என்பது இதன் பொருள். (உ-ம்.) குடத்தை வனந்தான் -הסs ఆ ఉత్త குடத்தை உடைத்தான் - அழித்தல் குடத்தை அடைந்தான் - அடைதல் குடத்தைத் துறந்தான் - நீத்தல் குடத்தை ஒத்தான் - ஒத்தல். ஆதி என்றமையால் இவ்வாறு செயப்படு பொருளாக வேற்றுமை செய்தலெல்லாம் கொள்க. ஒருவன் ஒரு வினைசெய்ய அதல்ை தோன்றிய பொருள் யாது அது செயப்படு பொருள் என்பதாம். ஒருவன் ஓர் வினை