பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 (உ-ம்) வாயாற்றக்கது வாய்ச்சி அறிவான் அமைந்த சான்ருேர் - இவையிரண்டும் கருவியின் பாற்படும். அதன் வினைப்படுதல் - ஒன்றஞல் ஒன்று தொழிலுறுதல் என்னும் பொருண்மை . (உ-ம்.) நாயாற் கோட்பட்டான். சாத்தனன் இச்செயல் முடியும் என்பதும் அது. இது வினைமுதலின் பாற்படும். அதனின் ஆதல் - ஒன்றனன் ஒன்று ஆதல் என்னும் பொருண்மை. (உ-ம்) வாணிகத்தானுயினன். அதனிற்கோடல் - ஒன் றன்ை ஒன்றைக் கொள்ளுதல். என்னும் பொருண்மை . (உ-ம்:) காணத்தாற் கொண்ட அரிசி. (காணம்-பொன்) இவையும் கருவியின் பாற்படும். அதைெடு மயங்கல்-ஒன்ற ளுேடு ஒன்று மயங்குதல் என்னும் பொருண்மை. (உ-ம்: ) எள்ளொடு விராய அரிசி , அதனெடியைந்த ஒருவினைக் கிளவி -ஒன்றைேடு ஒன்று இயைந்த ஒருவினையாகல் என்னும் பொருண்மை (உ-ம்) சாத்த ைெடு கொற்றன் வந்தான். வருதற்ருெழில் இருவர்க்கும் ஒத்தலின் ஒருவினேக் கிளவி யாயிற்று. அதைெடியைந்த வேறுவினேக்கிளவி-ஒன்றளுேடு ஒன்று இயைந்த வேறு வினேயாகல் என்னும் பொருண்மை. (உ-ம்:) மலேயொடு பொருத மால் யானே. பொருதல் யானைக் கல்லது மலேக்கின்மையின் வேறுவினைக் கிளவியாயிற்று. அத ைெடியைந்த ஒப்பு அல் ஒப்புரை - ஒன்றைேடு ஒன்று இயைந்த ஒப்பல்லாத ஒப்பினேயுரைத்தல் என்னும் பொரு ண்மை. (உ-ம்: ) விலங்கொடு மக்களனையர் இலங்கு நூல் கற்ருரோ டேனேயவர். ஒப்பல்லதனே ஒப்பாகக் கூறலின் ஒப்ப லொப் புரையாயிற்று. இம்மூன்றும் உடனிகழ்ச்சிப் பொருளில் வருவன . இன் ஆன் ஏது - இன்னும் ஆனுமாகிய அவற்றது ஏதுப்பொருண்மை (உ-ம்) முயற்சியிற் பிறத்தலான் ஒலி நிலேயாது. இதனுள் முயற்சியின் என்புழி இன் என்பது காரகவேது. பிறத்தலான் ஒலி நிலையாது என்பது ஞாபகவேது. ஐந்தாம் வேற்றுமைக் குரிய இன்னுருபுணர்த்தும் ஏதுவையும் ஈண்டு உடன் கூறியது ஏதுவை வரையறுத்தற்கு என்பர் நச்சிர்ைக்கினியர். ァ