பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 அன்ன பிறவும் என்பதனுற் கண்ணுற் கொத்தை, துரங்கு கையான் ஒங்குநடைய, மதியொடொக்கு முகம், சூலொடு கழுதை பாரஞ் சுமந்தது, மனத்தொடு வாய்மை மொழியின் என்பன போல்வனவும், காரணம் நிமித்தம் துணை மாறு என்பன வும் மூன்ரும் வேற்றுமைப் பொருளவாகவும் உருபுகளாகவும் தழுவிக்கொள்ளப்படும். கண்ணுற் கொத்தை என்பது சினை வினே முதற்கேறியது. துரங்குகையான் ஓங்கு நடைய என்புழி ஆன் ஒடுஉருபின் பொருள்பட வந்தது. மதியொடொக்கும் முகம் என்புழி ஒடு ஒப்பின் பொருள்பட வந்தது. சூலொடு கழுதை பாரஞ்சுமந்தது என்புழி ஒடு கட்புலகை ஒருவினைக் கிளவியாயிற்று. மனத்தொடு வாய்மை மொழியின் என்புழி ஒடு ஆனுருபின் பொருள்பட வந்தது. மூன்ரும் வேற்றுமையுருபும் பொருளும்பற்றித் தொல்காப் பியனர் கூறியதனையும் அவர்க்குப் பிற்காலத்தே தோன்றிய மாற்றங்களையும் அடியொற்றியமைந்தது, 296. மூன்ரு வதனுரு பாலா ைேடொடு கருவி கருத்தா வுட னிகழ் வதன் பொருள். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். மூன்ரும் வேற்றுமையின் உருபு முற்குறித்த ஆலேயன்றி ஆன் ஓடு ஒடு என்பனவும் ஆகும். அவற்றின் பொருள்களா வன தம்மையேற்ற பெயர்ப்பொருளைக் கருவியாகவும் ஏதுப் பொருட்டாகிய கருத்தாவாகவும் உடனிகழ்வதாகவும் வேற் றுமை செய்தலாம்?’ என்பது இதன் பொருளாகும். எசு. நான்காகுவதே குவ்வெனப் பெயரிய வேற்றுமைக்கிளவி எப்பொரு ளாயினுங் கொள்ளு மதுவே. இது, நான்காம் வேற்றுமையாமாறு உணர்த்துகின்றது.