பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 இனி இத்தொடர்க்கு உருபேற்கும் பொருட்கு வினையாத லுடைமை எனப் பொருள் வரைந்து அவர்க்குப் போக்குண்டு, அவர்க்கு வரவுண்டு என உதாரணங் காட்டுவர் தெய்வச்சிலே யார். அதற்கு உடம்படுதல் - ஒன்றற்கு ஒருபொருளை மேற் கொடுப்பதாக இசைதல். உ-ம்: சாத்தற்கு மகளுடம்பட்டார். அதற்குப் படுபொருள் - ஒன்றற்குரிமையுடையதாகப் பொதுவா கிய பொருளிற் பகுக்கப்படும் பொருள் . உ-ம். சாத்தற்குக் கூறு கொற்றன். அதுவாகுகிளவி-உருபேற்கும் பொருள்தானே யாய்த் திரிவதோர் பொருண்மை, உ -ம். தாலிக்குப் பொன் . பொன் தாலியாய்த் திரியுமாதலின் அது வாகுகிளவி எனப்பட் டது. கிளவி - பொருள். அதற்கு யாப்புடைமை - ஒன்றற்கு ஒன்று பொருத்தமுடையதாதல். உ-ம். கைக்கு யாப்புடையது கடகம். அதற்பொருட்டாதல்-ஒரு பொருளேப்பெறுதல் காரண மாக ஒரு தொழில் நிகழ்தல். உ-ம். கூழிற்குக் குற்றேவல் செய்யும். நட்பு-ஒன்றற்கு ஒன்று நட்பாதல். உ-ம். கபிலர்க்குத் தோழர் பரணர். பகை-ஒன்றற்கு ஒன்று பகையாதல். உ-ம். காரிக்குப் பகைவன் ஒரி. காதல். ஒன்றற்கு ஒன்று காதலுடைய தாதல். உ-ம். பரவையார்க்குக் காதலர் நம்பியாரூரர். சிறப்புஒன்றற்கு ஒன்று இன்றியமையாததாய்ச் சிறத்தல். உ-ம். வடுகரரசர்க்குச் சிறந்தார் சோழியவரசர்; கற்பார்க்குச் சிறந் தது செவி என்பதும் அது. கிளவியும் என்ற உம்மையால், பிணிக்கு மருந்து, நட்டார்க் குத் தோற்கும், அவற்குத்தக்காள் இவள், உற்ருர்க்குரியர் பொற்ருெடி மகளிர், இச்சொற்குப் பொருள் இது, மனேக்குப் பாழ் வாணுதலின்மை, போர்க்குப் புண என்ருற்போல்வன வும் கொள்ளப்படும். நான்காம் வேற்றுமைக்குரிய உருபும் பொருள்களுமாகிய இவற்றை இதற்கு இது எனத் தொகுத்து வகைப்படுத்துணர்த் தும் முறையில் அமைந்தது, 297. நான்கா வதற்குரு பாகுங் குவ்வே கொடை பகை நேர்ச்சி தகவது வாதல்