பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 பொருட்டுமுறை யாதியின் இதற்கிதெனல் பொருளே. என வரும் நன்னூற் சூத்திரமாகும். நான்காம் வேற்றுமைக்குக் குவ்வென்பது உருபாம். கொடை, பகை, நேர்ச்சி, தகவு, அதுவாதல், பொருட்டு, முறை முதலான பொருண்மைக்கண் இதற்கு இது? என நிற்றல் அதன் பொருளாம்’ என்பது இதன் பொருளாகும். நான்காம் வேற்றுமைக்குரிய ஏற்றுக் கோடற்பொருள் கேளாதேற்றல், கேட்டேயேற்றல், ஏலா தேற்றல், ஈவோனேற் றல், உயர்ந்தோனேற்றல், இழிந்தோனேற்றல், ஒப்போனேற் றல், உணர்வின்றேற்றல், விருப்பாயேற்றல், வெறுப்பா யேற்றல் என இவை முதலாகப்பலவுமாம் எனக்கூறி, இவற் றிற்கு முறையே ஆவிற்கு நீர் விட்டான், வறியார்க்கு ஈந்தான், மானுக்கனுக்கு அறிவைக் கொடுத்தான், தனக்குச் சோ றிட் டான், அரனுக்குக் கண்ணலர் கொடுத்தான் அரி, அரிக்குச் சக்கரங் கொடுத்தான் அரன், சோழற்கு விருந்து கொடுத்தான் சேரன், சோற்றிற்கு நெய்விட்டான், மாணுக்கனுக்குக் கசையடி கொடுத்தான் ஆசிரியன், கள்ளனுக்குக் கசையடி கொடுத் தான் அரசன் என உதாரணங் காட்டுவர் சிவஞானமுனிவர். ஆதி என்ற தல்ை வழக்கு, உரிமை, அச்சம், பாவனே முதலியன பற்றியும் வருதல் கொள்க. மருகனுக்கு மகட் கொடுத்தான் என்பது வழக்கு. மகனுக்கு அரசு கொடுத்தான் என்பது உரிமை. அரசர்க்குத் திறை கொடுத்தான் என்பது அச்சம் தந்தை தாய்க்குத் திதி கொடுத்தான் என்பது பாவனே . எ.அ. ஐந்தாகுவதே, இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி இதனின் இற்றிது வென்னு மதுவே. இது ஐந்தாம் வேற்றுமையாமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) ஐந்தாம் வேற்றுமையாவது இன் என்று பெயர் கொடுத்து ஒதப்பட்ட வேற்றுமைச் சொல்லாம். அஃது இப்