பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. தொல்காப்பியம்-கன்னூல் சொல்லதிகாரம் ‘எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி’ என மேற்பாயிரத்துள் நிறுத்தமுறையானே எழுத்திலக்கணங் கூறிய தொல்காப்பிய ஞர், இப்படலத்தாற் சொல்லிலக்கணங் கூறுகின்ருர். அதனல் இது சொல்லதிகாரம் என்னும் பெயர்த்தாயிற்று. சொல் என் பது முற்கூறிய எழுத்தின்ை ஆக்கப்பட்டு இருதினைப் பொருட் டன்மையையும் ஒருவர் உணர்ந்து கொள்ளுதற்குக் கருவி யாகிய ஓசையாகும். கிளவி, சொல், மொழி என்பன எழுத்தி லைாகிய ஓசையையே குறிப்பன. கட்லொலி, சங்கொளி, இடி யொலி முதலியன எழுத்தியல் தழுவா ஓசைகளாதலின் இவை சொல்லெனப்படா. இவற்றை அரவம், ஓசை, இசை என்ற சொற்களால் வழங்குதல் மரபு. சொல்லென்பது எழுத்தி குலாக்கப்பட்டு இருதிணைப் பொருள்களையும் அறிவிக்கும் ஓசை யென்றும், தன்னையுணர நின்றவழி எழுத்தெனவும், பிற பொருளையுணர்த்திய வழிச் சொல்லெனவும் கூறப்ப்டுமென்றும் கூறுவர் உரையாசிரியர். ஒருவர் தாம் பொருளை உணர்தற்கும் பிறர்க்கு உணர்த்தற்கும் கருவியாய் நிற்பது சொல். தானே ஒரு பொருளேக் கருதியுணர்த்தும் உணர்வு சொல்லுக்கு இல்லே . பொருளையுணர்த்துவா ைெருவன் சொல்லின் துணைகொண்டன் றிப் பொருளே யறிவுறுத்த லாகாமையின் அவனது தொழிலேச் சொல்லாகிய கருவிமே லேற்றிச் சொல் உணர்த்துமெனக் கருவிக் கருத்தாவாகக் கூறுவர் தொல்காப்பியர். சொற்களைப் பாகுபடுத்து விளக்கக் கருதிய ஆசிரியர், இருதின, ஐம்பால், எழுவகை வழு, எட்டு வேற்றுமை, அறு வகைத் தொகை, மூன்றிடம், மூன்று காலம், இருவகை வழக்கு என்னும் இவ்வெட்டு வகையான் ஆராய்ந்துணர்த்திகு இரன்பர் இளம்பூரணர். இவ்வெட்டிளுேடு சொல் நான்கு