பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 : ஒன்று பலகுழி இய தற்கிழமையும், வேறுபலகுழி இய தற் கிழமையும், ஒன்றியற்கிழமையும், உறுப்பின்கிழமையும், மெய் திரிந்தாய தற்கிழமையும் எனத் தற்கிழமை ஐந்துவகைப்படும். பொருளின் கிழமையும், நிலத்தின் கிழமையும், காலத்தின் கிழமையும் எனப் பிறிதின்கிழமை மூவகைப்படும். எள்ளது குப்பை என்பது, ஒன்றுபலகுழி இய தற்கிழமை, படையது குழாம் என்பது தானே, யானே, குதிரை ஆகிய வேறுபல குழி இய தற்கிழமை, நிலத்தினது அகலம் என்பது, ஒன்றியற்கிழமை. யானையது கோடு என்பது உறுப்பின்கிழமை, எள்ளினது சாந்து என்பது, மெய்திரிந்தாய தற்கிழமை, சாத்தனது பொன் என்பது பொருட்பிறிதின் கிழமை சாத்த னது ஊர் என்பது, இடப்பிறிதின் கிழமை , சாத்தனது நாள் என்பது காலப் பிறிதின் கிழமை. இனி, இவ்விரு.கிழமைப் பொருள்களையும் விரித்துரைப்பது அடுத்துவரும் சூத்திரமாகும். அக. இயற்கையின் உடைமையின் முறைமையிற் கிழமையின் செயற்கையின் முதுமையின் வினேயின் என்ரு கருவியிற் றுணயிற் கலத்தின் முதலின் ஒருவழி யுறுப்பிற். குழுஉவி ன்ென்ரு தெரிந்துமொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின் திரிந்து வேறுபடுஉம் பிறவும் அன்ன கூறிய மருங்கிற் ருேன்றுங் கிளவி ஆறன் பால என்மர்ை புலவர். இஃது ஆரும் வேற்றுமைப் பொருள் வேறுபாடு உணர்த்து கின்றது. (இ~ள்) இயற்கை முதலாக வாழ்ச்சியிருகச் சொல்லப் பட்டனவும் திரிந்து வேறுபடும் அவை போல்வன பிறவுமாகிய