பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 முற்கூறிய கிழமைப் பொருளின்கண் தோன்றும் சொல்லெல் லாம் ஆரும் வேற்றுமைப் பாலன என்று சொல்லுவர் புலவர் எ-று. திரிந்து வேறுபடுதல் அன்னபிறவும் என்ற தல்ை தழுவப் படுவனவற்றுள் ஒரு சாரனவற்றிற்கே கொள்க. (உ. ம் :). எள்ளது குப்பை படையது குழாம் என்பன குழுஉக்கிழமை அவை முறையானே ஒன்றுபலகுழிஇயதும் வேறுபல குழி இயதுமாம். சாத்தனது இயற்கை, நிலத்த தகலம் என்பன இயற்கைக் கிழமை . சாத்தனது நிலேமை; சாத்தனதில்லாமை என்பன நிலேக்கிழமை , இயற் கையும் நிலேயும் ஆகிய இவை ஒன்றியற்கிழமையாம். யானே யது கோடு, புலியது.கிர் என்பன உறுப்பின் கிழமை உறுப் பாவது ஒரு பொருளின் ஏகதேசம் என்பது அறிவித்தற்கு ஒருவழியுறுப்பு என்ருர். சாத்தனது செயற்கை, சாத்தனது கல்வியறிவு என்பன செயற்கைக்கிழமை , அரசனது முதுமை, அரசனது முதிர்வு என்பன முதுமைக்கிழமை. முதுமை என் பது பிறிதோர் காரணம் பற்ருது காலம்பற்றி ஒருதலையாக அப்பொருளின்கண் தோன்றும் பருவமாகலின் செயற்கையுள் அடக்காது வேறுகூறப் பட்டது. சாத்தனது தொழில் சாத்த னது செலவு என்பன வினைக்கிழமை. உறுப்பு, செயற்கை, முதுமை, வினே என்னும் இவை மெய்திரிந்தாய தற்கிழமை யாகும். சாத்தன துடைமை சாத்தனது தோட்டம் என்பன உடைமைக்கிழமை மறியது தாய், மறியது தந்தை என்பன முறைமைக்கிழமை இசையது கருவி, வனேகலத்தது திகிரி என்பன கருவிக்கிழமை. அவனது துணே, அவன் திணங்கு என்பன துணைக்கிழமை. நிலத்த தொற்றிக் கலம், சாத்தனது விலேத் தீட்டு என்பன கலக்கிழமை. கலம் என்றது ஆவண ஒலேயின. ஒற்றியது முதல், ஒற்றியது பொருள் என்பன முதற்கிழமை. ஈண்டு முதல் என்றது பொருளினே கபிலரது பாட்டு பரணரது பாட்டியல் என்பன செய்யுட்கிழமை. தெரிந்து (ஆராய்ந்து) மொழியாற் செய்யப்படுதலின் தெரிந்துமொழிச் செய்தியாயின. மேற்குறித்த உடைமை, முறைமை, கருவி, துணை, கலம், முதல், செய்யுள் ஆகிய இவை பொருட்பிறிதின்