பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 இருபாற் கிழமையின் மருவுற வருமே ஐம்பா லுரிமையும் அதன்தற் கிழமை. என்ருர் அகத்தியனர்?’ எனப் பிற்கால அகத்தியச் சூத்தி ரத்தை மேற்கோளாக எடுத்துக் காட்டுவர் மயிலேநாதர். சொத்தனது ஆடை என்புழிச் சாத்தனது கை என்றற் போலாது, சாத்தனுக்குரிய ஆடை அவனிற் பிறிதாதலின் பிறிதாகியகிழமை பிறிதின் கிழமையெனப்பட்டது. அஃறிணையொருமை பன்மைகட்கு இயைந்த அது, ஆது, அ என்னும் உருபுகளைக் கூறவே, இவை உயர்திணையொருமை பன்மைகளாகிய கிழமைப்பொருட்கு ஏற்றனவாகா என்பது பெறப்படும். அவை வருங்கால் அவனுடைய விறலி, அவ னுடைய விறலியர் என மூன்று சொல்லாய் இரண்டு சந்தியாய், முன்னது எழுவாய்ச் சந்தியும் பின்னது பெயரெச்சக் குறிப்புச் சந்தியும் ஆம் என்பர் சிவஞான முனிவர். இவற்றை ஆரும் வேற்றுமைச் சந்தி என்றும் உடைய’ என்பதனைச் சொல்லுரு பென்றும் கூறுவாருமுளர். ஆரும் வேற்றுமைப் பொருளைக் குறைப்பொருள் என்ற பெயரால் வழங்குதலும் உண்டு. அஉ. ஏழாகுவதே, கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினே செய் யிடத்தி னிலத்திற் காலத்தின் அனேவகைக் குறிப்பிற் ருேன்று மதுவே. இஃது ஏழாம் வேற்றுமையாமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) ஏழாம் வேற்றுமையாவது, கண் என்று பெயர் கொடுத்தோதப்பட்ட வேற்றுமைச் சொல்லாம். அது வினை செய்யா நிற்றலாகிய இடமும் நிலமாகிய இடமும் கால மாகிய இடமும் என அம்மூவகைக் குறிப்பின்கண்ணும் தோன்றும். எ-று. எனவே ஏழாம் வேற்றுமை இடப் பொருண் மைத்து என்றவாரும். 'அனேவகைக் குறிப்பிற்றேன்றும் அது என்றது, வினே செய் இடம், நிலம், காலம் ஆகிய அவற்றை இடமாகக் குறித்த