பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 16 அரசன்கணிருந்தான் என்றும், ஆலின்கீழ்க் கிடந்த ஆவை ஆலின்கட் கிடந்தது என்றும், மரத்தின் மேலிருந்த குரங்கை மரத்தின்கணிருந்தது என்றும், ஏர்ப்பின் சென்ருனே ஏர்க்கட் சென்ருன் என்றும், காட்டுச்சா ரோடுவதனைக் காட்டின்க ணுேடும் என்றும், உறையூர்க் கயனின்ற சிராப்பள்ளிக்குன்றை உறையூர்க்கட்குன்று என்றும், எயிற்புடைநின்ரு ரை எயிற்க ணின் ருர் என்றும், வடபால் வேங்கடம் தென்பாற்குமரி என்பன வற்றை வடக்கண் வேங்கடம் தெற்கட்குமரி என்றும், புலிமுன் பட்டானைப் புலிக்கட்பட்டான் என்றும், நூலி னிடையுங் கடை யுந் தலையு நின்ற மங்கலத்தை நூற்கண்மங்கலம் என்றும், கை வலத்துள்ளதனேக் கைக்கனுள்ளது என்றும், தன்னிடத்து நிகழ்வதனேத் தன்கணிகழ்வது என்றும் அவ்விடப் பொருள் பற்றி ஏழாம் வேற்றுமை வந்தவாறு கண்டு கொள்க. ஏழாம் வேற்றுமைக்குக் கண் என்பது உருபாகும் என்பது மேலே கூறப்பட்டமையால் இச் சூத்திரத்து மீண்டும் கண் கால்? எனத் தொடங்குதல் கூறியது கூறலாம் ஆதலானும், இச் சூத்திரத்துவரும் புறம் அகம் வலம் என்பனவற்றுக்கு, ஊர்ப் புறத்திருந்தான், ஊரகத்திருந்தான், கைவலத்துள்ளது கொடுக் கும், என உரையாசிரியர் இளம்பூரணர் அவற்றின் பின் அத்துச் சாரியை கொடுத்து உதாரணங்காட்டினமையால் புறம் அகம் வலம் என்பனவற்றை உருபெனக் கொள்ளுதல் அவர்க்குக் கருத் தன்றென்பதும், ஆசிரியர் உருபேற்கும் பெய்ர்க்கும் உருபுக்கும் இடையே சரியைப்பேறு கூறியதன்றி உருபின் பின்னர்ச் சாரியைப் பேறு கூருமையானும் இச்சூத்திரத்துக் கூறப்படும் கண் கால் புறம் அகம் உள் என்பன முதலாயின உலக வழக்கில் பல்வேறு இடப் பொருள்களில் ஆளப்பெறுதலானும் இவற்றை ஏழாம் வேற்றுமையுருபுகளெனக்கொள்ளாது ஏழாம் வேற்றுமைப் பொருள் வேறுபாடுகளாகக் கொள்ளுதலே ஏற்புடையதாகும் என் பதும் சேனவரையர் கருத்தாகும். எனினும் கண் கால் முதலிய இவை இடத்தின் பொதுமையுணரவரும் கண்ணென்னும் உரு பின் வழி வாராது அவ்வுருபு நின்ற நிலைக்களத்து நின்று இட வகைகளாகிய சிறப்புப் பொருண்மையுணர்த்தி நிற்றல் கான லாம். அன்றியும், இச்சூத்திரத்துக் குறிப்பிட்ட கண் கால் புறம் அகம் முதலியன, முன் - இரண்டாம் வேற்றுமை முதலிய