பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 வற்றுக்கு எடுத்தோதிய காப்பு முதலிய பொருள்களைப் போல உருபை முடித்து நிற்பனவாகாமல் இடப் பொருளின் பொதுமை யுணர்த்தும் கண் என்னும் உருபின் நிலேக்களத்து நின்று இட வகைகளாகிய பொருள் வகையினைப் புலப்படுத்துவனவாத லின் இவை உருபின் தன்மையும் பொருளின் தன்மையும் ஒருங் குடையன எனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும். இவை உருபின் தன்மை உடையவாதல் பற்றி என்னுழை, என் முன் என நிலை மொழி உருபிற்கேற்ற செய்கை பெற்றும், பொருளின் தன்மை பற்றி, ஊரகத்திருந்தான் ஊர்ப்புறத் திருந்தான் என ஈற்றின் சாரியை பெற்றும் வந்தன எனக் கருத வேண்டியுளது. ஆசிரியர் தொல்காப்பியனுர் கூறிய ஏழாம் வேற்றுமை யுருபும் பொருளுமாகிய இவற்றின் தன்மையினே உய்த்துணர்ந்த பவணந்தி முனிவர், 300. ஏழ னுருபு கண்ணுதியாகும் பொருண் முதலாறும் ஒரிரு கிழமையின் இடய்ை நிற்றல் இதன் பொரு ளென் ப. எனவும், 301. கண்கால் கடையிடை தலேவாய் திசைவயின் முன் சார் வலமிட மேல்கீழ் புடை முதல் பின்பா டளேதே முழைவழி யுழியுளி உள்ளகம் புறமில் லிடப்பொரு ளுருடே. எனவும் வரும் இரு சூத்திரங்களால் ஏழாம் வேற்றுமையுருபும் பொருளும் பற்றித் தெளிவாக விளக்கியுள்ளார். 'ஏழாம் வேற்றுமைக்கு உருபு கண் என்பது முதலானவை யாம். பொருள், இடம், காலம், சினே, குணம், தொழில் என்பன ஆறும் தற்கிழமையாலும் பிறிதின் கிழமையாலும் ஒன்றற்கு இடனுய் நிற்றல் இதன் பொருள் என்று சொல்லுவர்; கண் முதலாக எண்ணப்பட்ட இருபத்தெட்டும் இடமாகிய பொருள் வகைகளேப் புலப்படுத்தும் உருபுகளாம். என்பது இவற்றின் பொருளாகும்.