பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g வகைய என்றலும், அவற்றையே பலவாகப் பகுத்தலும், விகாரவகையும், பொருள்கோள் வகையும், செய்யுட்குரிய சொல் நான்கென்றலும், என இவையுங் கூட்டி எட்டிறந்த பலவகையான் ஆராய்ந்துணர்த்தினரென்பர் நச்சிர்ைக்கினியர் சொல் தனிமொழி, தொடர் மொழி என இருவகைப்படும். மொழிகள் யாங்கனுந் தனித்து நில்லாவேனும் இப்பொருட்கு இச்சொல் என அறிவுடையோர் வரையறுத்துக் கூறிய படைப் புக் காலத்தும், தொடர்மொழிச் சொற்களுள் ஒன்று நிற்ப மற்றைய எஞ்சிய வழியும் தனித்து நிற்றலுண்டு. அதல்ை தனி மொழியென்ற பிரிவும் கொள்ளப்படுவதாயிற்று. தனிமொழி, பொருண்மை மாத்திரம் உணர்த்துவதல்லது கேட்டார்க்கொரு பயன்பட நிற்பதன்று. கேட்டார்க்குப் பொருளினிது விளக்கிப் பயன்பட நிற்பன தொடர் மொழிகளேயாம். ஆகவே தொடர் மொழிகளின் இயல்பினை முன்னுணர்த்தி அவற்றுக்குக் கருவி யாகிய தனிமொழி யிலக்கணத்தினைப் பின்னுணர்த்துதலே முறையாகும். இம்முறையினை யுளத்துட்கொண்ட தொல்காப்பி யர், இப்படலத்துள் அல்வழி வேற்றுமையாகிய தொடர்மொழி களின் இலக்கணத்தை முன்னுணர்த்தி, அத்தொடர் மொழிகளைப் பகுத்துக்காணும் முறையால் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய தனிமொழிகளின் இலக் கணங்களைப் பின்னர் உணர்த்துவர். சொற்கள் ஒன்ருேடொன்று தொடருங்கால் பயனிலை வகையானும் தொகைநிலை வகையானும், எண்ணுநிலை வகை யானும் தொடருமென்பது தமிழிலக்கண மரபாகும். சாத்தன் வந்தான் என்ருற்போல எழுவாயும் பயனிலையுமாகத் தொடர்ந்து நிற்பது பயனிலவகை எனப்படும். வேற்றுமையுருபும் உவம உருபும் எண்ணும்மையாகிய இடைச்சொல்லும் வினைச்சொல் வீறும் பண்புணர்த்தும் ஈறும் இவையல்லாத பிறிதோர் சொல் லும் மறைந்து நிற்கத் தொடரும் சொல்லினது தொடர்ச்சி தொகை நிலேவகை யெனப்படும். பொருள்களை ஒன்ருே டெர்ன்று சேர்த்து எண்ணும் முறையில் அமைந்த சொற்களது தொடர்ச்சி எண்ணு நிலவகை யெனப்படும். இவ்வாறு மூவகை யால் தொடரும் தொடர்மொழிக ளெல்லாவற்றையும் பொருள்