பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 18 அச. வேற்றுமைப் பொருளே விரிக்குங் காலே ஈற்று நின் றியலுந் தொகை வயிற் பிரிந்து பல்லாருகப் பொருள் புணர்ந் திசைக்கும் எல்லாச் சொல்லும் உரிய வென்ப. இது, வேற்றுமைக்கண் கிடந்ததோர் இலக்கண முணர்த்து கின்றது. (இ-ள்) வேற்றுமைப்பொருளேவிரிக்குமிடத் து, அன்மொழித் தொகையை விரிப்புழிப் பல்லாற்ருன் அன்மொழிப் பொருளொடு புணர்ந்து வரும் எல்லாச் சொல்லும் விரிக்கப்படுதல் போன்று வேண்டும் சொல்லெல்லாம் விரித்துரைத்தற்குரியன என்பர் ஆசிரியர் எனச் சேவைரையரும் நச்சினர்க்கினியரும் இச் சூத்திரத்துக்குப் பொருள் கூறினர். வேற்றுமைக்கண் உருபுதொகப் பொருள் புணர்ந்து நிற் பது வேற்றுமைத் தொகையாதலின் அத்தொகையினை வேற் றுமைப் பொருள்? எனக் குறித்தார் ஆசிரியர். ஈற்று நின்றி யலும் தொகை என்றது பண்புத்தொகை முதலிய தொகை களின் இறுதியில் நின்றியலும் அன்மொழித் தொகையினே. இந்நுட்பம் ஈற்று நின்றியலும் அன்மொழித் தொகையே?? (எச்சவியில் - 22) எனப் பின்னரும் ஆசிரியர் விளங்கக் கூறுதலால் இனிது புலனுதல் காணலாம். (உ-ம்) தாழ் குழல், பொற்ருெடி, மட்காரணம் என்னும் அன்மொழித் தொகைகளே விரிப்புழி, தாழ் குழலேயுடையாள், பொற்ருெடியை யணிந்தாள், மண்ணுகிய காரணத்தான் இயன் றது என விரித்துரைக்கப் பெறும் உடைமையும் அணிதலும் இயறலும் ஆகிய சொற்கள், கருங்குழற்பேதை, பொற்ருெடி யரிவை, மட்குடம் என்னும் வேற்றுமைத் தொகைகளே விரிப் புழியும் கருங்குழலேயுடைய பேதை, பொற்ருெடியையணிந்த அரிவை, மண்ணுனியன்ற குடம் என முறையே விரித்துரைக் கும் நிலையில் அத்தொகைக்கண் அமைந்துள்ளமை காண லாம்.