பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 உரையாசிரியர் இச்சூத்திரத்தினை, வேற்றுமைப் பொருளே விரிக்குங்காலே ஈற்று நின்றியலும் தொகை வயிற் பிரிந்தே: எனவும், 'பல்லாருகப் பொருள் புணர்ந் திசைக்கும் எல்லாச் சொல்லும் உரியவென்ப2 எனவும் இரண்டு சூத்திரங்களாகப் பகுத்து உரைகூறினர். தம்மதம் இதுவென்பது போதர ஒன்ருக வுரைப்பாரும் உளர் என்ருர் எனச் சேவைரையர் கூறும் குறிப்பு இப்பொழுது அச் சிடப் பெற்று வழங்கும் இளம்பூரணருரையிற் காணப்பட வில்லை . இனி, இதனை 'தொக்க வேற்றுமையுருபு விரியுங்கால் மொழியீற்றுக் கண்ணே புலப்படும் எனவும், உருபு தொக்கும் விரிந்தும் நிற்கும் ஆண்டு அவ்வுருபே போல வந்து ஒட்ட நிற்பன பிற சொற்களும் உள. அவையெல்லாம் அவ்வுருபே போல ஆண்டே தொகுத்தலும் விரித்தலும் உடையன என வும் இரு சூத்திரங்களாகப் பகுத்துப் பொருள் கூறிய இளம் பூரணர், குதிரைத்தேர் என்பது, குதிரையாற் பூட்டப்பட்ட் தேர்; ஆன் என்பது ஆண்டு உருபு; பூட்டப்பட்டது என ஆண்டு உருபல்லது, ஆண்டு உருபு தொக்கு நின்ருங்கே நிற் கவும் அமையும் விரித்துக் காட்டவும் அமையும்’ என்று விளக் கமும் கூறுவர். இனி, வேற்றுமைப் பொருளே விரிக்குங்காலே என்னும் இச்சூத்திரம் அறுவகை வேற்றுமைக்கும் புறநடை உணர்த் துகின்றதெனக் கருத்துரைத்த தெய்வச்சிலேயார், வேற்று மைக்குரிய பொருளே விரியக் கூறுங்கால், முதற்பெயர் இறுதிக் கண் இயலும் தொகைச் சொல்லின்கண் தொகையாம் தன் மையிற் பிரிந்து பலநெறியாகப் பொருளைப் புணர்ந்து ஒலிக்கும் எல்லாச் சொல்லும் உரிய என்று சொல்லுவர் ஆசிரியர் என இச்சூத்திரத்திற்குப் பொருள் வரைந்து பின்வருமாறு உதார ணங் காட்டி விளக்குவர். 8